டெல்லி: இந்தியாவில் தற்போது காப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நாம் ஒரு மருத்துவ காப்பீடு எடுக்கிறோம் என்றால் கூட குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் நாம் பிரிமியமாக செலுத்த வேண்டும். இதில் கிட்டதட்ட 9,000 ரூபாயை ஜிஎஸ்டி-ஆக மட்டுமே செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி 18 சதவீதம் விதிக்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் காப்பீடு திட்டங்களை எடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அனைத்து மக்களிடமும் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்றால் அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் அல்லது காப்பீடு திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தான் கூடிய விரைவில் நடைபெற இருக்கக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான பிரிமியங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைப்பது அல்லது முற்றிலுமாக நீக்குவது என்ற ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரசு இவ்வாறு காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியங்களை குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் கோடிக்கணக்கான இந்தியர்கள் அதன் மூலம் பயன் பெறுவார்கள். சாதாரண மக்கள் தாங்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையில் பெருமளவு பணம் சேமிக்க முடியும் . ஏற்கனவே கூறிய உதாரணத்தைப் போலவே மூத்த குடிமக்கள் மருத்துவ காப்பீட்டுக்கு 50,000 ரூபாயை ப்ரீமியமாக செலுத்தி வருகிறார்கள் என்றால் அதில் 9,000 ரூபாய் வரை குறைந்து 41,000 ரூபாய் மட்டுமே செலுத்துவார்கள்.
இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் குறைவான மக்களே மருத்துவ காப்பீடு திட்டங்களை வைத்திருக்கின்றனர் . அதேபோல டெர்ம் இன்சூரன்ஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு . ஜிஎஸ்டி நீக்கப்பட்டால் பிரீமியம் குறைந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் காப்பீடு திட்டங்கள் எடுப்பதற்கு முன்வருவார்கள் என சொல்லப்படுகிறது . எதிர் வரக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்து மிக முக்கியமான ஆலோசனை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டாலோ அல்லது முழுவதுமாக நீக்கப்பட்டாலோ பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவ காப்பீடு மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களை நோக்கி வருவார்கள். இந்தியாவில் மருத்துவ பணவீக்கம் என்பது 14 சதவீதமாக இருக்கிறது . அதாவது கடந்த ஆண்டு ஒரு மருத்துவ சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாயை செலவு செய்திருந்தால் இந்த ஆண்டு 1. 14 லட்சம் ரூபாயாக நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மருத்துவ செலவினங்கள் உயர்ந்து வருகிறது.
அரசு ஒருவேளை காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டியை குறைத்தால் ஆண்டுக்கு 2600 கோடி வரையிலான வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகிறது . ஒரு சிலர் காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரியை அரசு 18 இல் இருந்து 5 அல்லது 12 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஃபினகேடா நிறுவனத்தின் மேலா இயக்குனரான மனிஷ் குமார் கோயல் காப்பீடு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டி குறித்த முடிவு கோடிக்கணக்கான இந்தியர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்திருக்கிறார்
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications