இந்தியாவின் மறைமுக வரி விதிப்பை தலைகீழாக மாற்றியுள்ள ஜிஎஸ்டி முறையில் முக்கியமான சீர்திருத்தங்களைச் செய்ய மத்திய நிதியமைச்சகத்தின் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. இக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில் நிதியமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மத்திய நிதித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டாலும், நாட்டின் பெரும்பாலான மக்களின் கவனம் முழுவதும் ஹெல்த் இன்சூரன்ஸ் சார்ந்த அறிவிப்பின் மீது உள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வருவது மட்டும் அல்லாமல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி-யின் ஒரு கடிதமும் இதில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளது. முதலாவது ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, இரண்டாவதாகப் பல வருடங்களாக விவாதத்தில் இருக்கும் ஜிஎஸ்டி பலகையை மறுசீரமைப்பு செய்வது. இந்த இரண்டு விஷயங்களுக்குத் தீர்வு காணப்பட்டால் நாட்டு மக்களின் பெரும் பகுதி மக்கள் பலன் அடைவார்கள்.
தற்போது மத்திய அரசு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வு செய்துள்ள மக்கள் செலுத்தும் ப்ரீமியம் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு மக்களுக்கும் சரி, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் சரி பெரும் சுமையாகவே உள்ளது.
இதேபோல் ஆபத்துக் காலத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றி மக்களை நிதி சிக்கலில் இருந்து காப்பாற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் மீது 18 சதவீதம் என்ற அதிகப்படியான வரி விதிப்பதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது பரவலாக எழுந்துள்ளது.
இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடக்க உள்ளது, இதில் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான கூட்டம் கட்டாயம் முக்கியமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை வல்லுனர்களின் கணிப்பின்படி இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் லைப் இன்சூரன்ஸ் மீதான ப்ரீமியம் தொகைக்கு இன்புட் டாக்ஸ் இல்லாமல் 5 சதவீதம் ஜிஎஸ்டி அல்லது அனைத்து B2C வர்த்தகத்தில் இருப்பது போலவே ஓரே மாதிரியாக 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று அதன் GST amnesty scheme விரிவாக்கம் செய்யப்படும் என்று கருத்து நிலவுகிறது. இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டால் ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்குக் கூடுதல் வரி சலுகை கிடைக்கும்.
இதோடு ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட கால கோரிக்கையாக under-construction நிலையில் இருக்கும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன?: ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மத்திய நிதியமைச்சர் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவாகும். இது ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பாகும்.


Click it and Unblock the Notifications