மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் அல்லாமல் மத்திய நிதித்துறையை சேர்ந்த இணை அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

இன்று நடக்கும் ஸ்பெஷலான 50வது ஜிஎஸ்டி கூட்டத்தில் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் முக்கியமான வரி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் செலவை காட்டிலும் அங்கு விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் விலைதான் மிகவும் அதிகமாக உள்ளது.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 50வது கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் குறையலாம்.
மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) அமைப்பு, சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் சில உணவு மற்றும் பானங்களின் வரிகளை தற்போது நடைமுறையில் உள்ள 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க கோரிக்கை வைத்துள்ளது.
இதேவேளையில் இந்த வரி நடைமுறை சில மல்டிபிளெக்ஸ் திரையரங்கங்களில் நடைமுறையில் இருப்பதாகவும் புகார் வந்துள்ளது. இதற்கான விளக்கத்தைக் கொடுக்குமாறு பிட்மென்ட் கமிட்டி ஜிஎஸ்டி கவுன்சில்-யிடம் கூறியுள்ளது. இதற்கான விளக்கம் மூலம் பாப்கார்ன் முதல் அனைத்து திரையரங்கு உணவுகளின் விலை குறையலாம்.

இதேபோல் பல திரையரங்குகள் சினிமா டிக்கெட் மற்றும் ஸ்னாக்ஸ் - குளிர்பானம் ஆகியவற்றை சேர்த்து காம்போ-வாக விற்பனை செய்கிறது. இதை composite supply என கருதி அதற்கான வரியை தான் விதிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
பொதுவாக 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட்-களுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கும் அதிக விலை கொண்ட சினிமா டிக்கெட்-களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications