மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 49வது கூட்டம், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நண்பகல் 12 மணிக்குத் துவங்கியது. இக்கூட்டம் முடிவடைந்து மாலை 4.30க்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் மாநிலங்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விடுவிக்க ஒப்புதல் அளித்தது முதல் பல முக்கியமான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி இழப்பீடு கிடைக்கும்..? எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது..? வாங்க பார்ப்போம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.16,982 யை விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை இல்லாதபோதும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு சொந்த நிதி ஆதாரத்திலிருந்து நிலுவைத் தொகையை விடுக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை ரூ.1,201 கோடி கிடைக்க உள்ளதாகத் தெரிகிறது.
ஐந்து வருட இழப்பீடு முடிந்தது
இந்தத் தொகையை வரும் காலத்தில் வசூலிக்கப்படும் செஸ் வரியில் இருந்து ஈடு செய்யப்பட உள்ளதாகவும், ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இன் விதிகளின்படி, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சிமெண்ட் - ஏமாற்றம்
இக்கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிமெண்ட் மீதான வரிக் குறைப்பு குறித்து எவ்விதமான அறிவிப்புகளும் வராதது ஒட்டுமொத்த கட்டுமான துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டேக் ட்ராக்கிங் வரிக் குறைப்பு
டேக் ட்ராக்கிங் சாதனங்கள் அல்லது durable container-களில் பொருத்தப்பட்டிருக்கும் டேட்டா லாக்கர்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதன் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 0% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.
பென்சில் ஷார்பனர் வரிக் குறைப்பு
இதேபோல் பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ராப் - வரிக் குறைப்பு
ராப் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்கக் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ரப் என்பது ஒரு வகையான திரவ வெல்லமாகும், இது உத்தரபிரதேசம் மற்றும் பிற வெல்லம் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு உதவும்.
பேக் செய்யப்பட்டால் 5% வரி
ராப் எனப்படும் திரவ வெல்லம் தளர்வாக (Loose) விற்பனை செய்யப்பட்டால் பூஜ்யம் ஜிஎஸ்டி வரி . ஆனால் முன்கூட்டியே பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் அது 5% வரி விதிக்கப்பட்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மீதான ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு மொழி மாற்றத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட அறிக்கை அடுத்த 5-6 நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications