மத்திய நிதியமைச்சகத்தின் தலைமையிலான 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மத்திய நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் இன்று விவாதிக்கப்படும் 2 முக்கியமான விஷயங்கள் மீது மக்கள் அதிகமான கவனத்தைச் செலுத்தி வந்த நிலையில், இதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் ஜிஎஸ்டி கூட்டம் முடிவிற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2000 ரூபாய்க்குக் கீழ் செய்யும் பேமெண்ட் கேட்வே வாயிலான பேமெண்ட் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான விவாதத்தின் போது கூடுதல் விபரங்களுக்கும், தீர்வுகளுக்காக ஜிஎஸ்டி கவுன்சில் பிட்மென்ட் குழுவுக்கு இந்த விஷயத்தை விரிவான முறையில் ஆய்வு செய்ய அனுப்பியுள்ளதாகத் தான் தெரிவித்தார்.

54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ரூ. 2000 வரை நடக்கும் பரிவர்த்தனைகளிலிருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து பணம் ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி அமைப்பு சில பேமெண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது பெரும் விவாத பொருளாக மாறியது. இந்த நிலையில் தான் இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து அடுத்த முக்கியமான விஷயம் ஹெல்த் இன்சூரன்ஸ் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை நீக்கக் கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வருவது மட்டும் அல்லாமல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி-யின் ஒரு கடிதமும் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதத்திற்கு ஏற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் இன்சூரன்ஸ் பிரீமியம் தொடர்பான விவாதத்தை அடுத்த கூட்டத்திற்குத் தள்ளிவைத்ததுள்ளது. 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், காப்பீட்டு பிரீமியம் குறித்த விவாதம் அடுத்த கூட்டத்தில் நடைபெறும் என்றும் சில அறிக்கைகள் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் ஜிஎஸ்டி கூட்டம் முடிவிற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆன்மீக சுற்றுலா-வின் போது மேற்கொள்ளப்படும் ஹெலிக்காப்டர் சேவை மீது ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
இதோடு இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (R&D) தொடர்பான பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் தொகை மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதுத்தொடர்பாக கூடுதல் விபரம் திரட்ட பிட்மென்ட் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications