SUV கார்களுக்கு இது தான் வரி.. கண்டிஷன்களை விளக்கிய ஜிஎஸ்டி கவுன்சில்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 17, சனிக்கிழமை தலைநகரான டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில்-ன் 48வது கூட்டத்தை விர்ச்சுவல் முறையில் நடத்தினார்.

இக்கூட்டத்தில் எஸ்யூவி கார்களுக்கான விரி விதிப்பு முறையில் இருக்கும் கண்டிஷன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் புதிதாகக் கார் வாங்குவோருக்கும், குழப்பத்தில் இருக்கும் கார் தயாரிப்பாளர்களுக்கும் தீர்வு கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி கூட்டம்

ஜிஎஸ்டி கூட்டம்

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை நிர்மலா சீதாராமன் தலைமையிலான நிதியமைச்சகம் துவங்கியுள்ள நிலையில், இந்த ஜிஎஸ்டி கூட்டம் விர்ச்சுவல் முறையில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஒரு SUV கார் என்றால் என்ன, எத்தகைய வகைக் கார்களுக்கு இந்த அதிகப்படியான வரி பொருந்தும் எனக் கூறப்பட்டது

SUV கார்

SUV கார்

ஒரு கார் இந்த நான்கு நிபந்தனைகளையும் பூர்த்திச் செய்யும் பட்சத்தில் அதிகப்படியான இழப்பீட்டுத் செஸ் 22 சதவிகிதத்தைப் பெறும் எனக் கூறப்படுகிறது. SUV எனப் பிரபலமாக அறியப்படும் பெரிய வடிவிலான கார்கள் தற்போது அதிகமாக விற்பனை செய்யப்படும் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் விளக்கம் முக்கியமானதாக இருந்தது.

4 முக்கியக் கண்டிஷன்

4 முக்கியக் கண்டிஷன்

ஒரு காரின் எஞ்சின் திறன் 1500 சிசிக்கு மேல், நீளம் 4000 மிமீக்கு மேல் மற்றும் 170 மிமீ அல்லது அதற்கு மேல் கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன் எஸ்யூவி பிரிவில் இருக்கும் அனைத்து கார்களுக்கு அதிகப்படியான இழப்பீட்டுத் செஸ் 22 சதவிகிதத்தைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கான்ராட் சங்மா

கான்ராட் சங்மா

மேலும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் (GoM) அறிக்கையில் இந்தியா முழுவதும் எதிர்பார்த்து இருந்த ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பட்ஜெட்-க்கு முந்தைய கூட்டம் என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவை மீது புதிய கூடுதலான வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விர்ச்சுவல் முறையில் நடத்தினார்.மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+