டிசம்பர் 17 (இன்று) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 48வது கூட்டம் விர்ச்சுவல் முறையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புகையிலை மற்றும் குட்கா மீதான வரி விதிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனால் பட்ஜெட் கூட்டத்தில் சிகரெட்-ஐ தனித்தனியாக விற்பனை செய்யக் கூடாது மொத்தமாகப் பாக்கெட்-ல் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வர வாய்ப்புகள் உள்ளது.
முக்கிய அறிவிப்பு
இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் எந்தப் பொருட்கள் மீதும் புதிய வரி விதிக்கப்படவில்லை என்பது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதேபோல் எரிபொருள் செலவுகளைக் குறைக்கும் விதமாக Biofuel மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 17, சனிக்கிழமை நாட்டின் தலைநகரான டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில்-ன் 48வது கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய வரிகள் விதிக்காதது மக்களை மகிழ்வித்துள்ளது.
நோ க்ளைம் போனஸ் -க்கு
இன்று நடந்த 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் நோ க்ளைம் போனஸ் -க்கு இனி ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இன்று எந்தவொரு பொருளுக்கும் வரி அதிகரிப்பு அறிவிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் குழு
கடந்த ஆண்டு மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) தனது அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.
முக்கியக் குற்றங்கள்
ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமையன்று சில குற்றங்களைக் குற்றமற்றதாக மாற்ற ஒப்புக்கொண்டது மற்றும் வழக்குத் தொடங்குவதற்கான வரம்பை 1 கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
ஜிஎஸ்டி இன்வாய்ஸ்
ஆனால் இதில் பொருட்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்காமல் இன்வாய்ஸ் வழங்கிய குற்றம் சேர்க்கப்படமாட்டாது என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் காம்போன்டிங் தொகை அளவை தற்போது இருக்கும் 50% - 150% இருந்து 25% - 100% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications