சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
மத்திய அரசும், ஜிஎஸ்டி கவுன்சில்-ம் நீண்ட கால தாமத்திற்கு பின்பு ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கூட்டத்தில் வட்டி குறைப்போ அல்லது 28 சதவீத வரியை திரும்ப பெறப்படும் அறிவிப்பு ஏதேனும் இருக்குமா..?

கட்டாயம் இல்லை, ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இதை நடைமுறைப்படுவதற்கு தேவையான சட்ட திருத்தம் மற்றும் விதிகளில் மாற்றங்கள் தொடர்பான விவரங்கள் இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் முன் வைக்கப்படும் என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஆன்லைன் கேமிங், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கலை தீர்க்க வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜிஎஸ்டி கவுன்சில் ஆகஸ்ட் 2ம் தேதி கூடுகிறது. ஜிஎஸ்டி சட்டத்தில் இதற்கான மாற்றங்கள் மற்றும் கவுன்சிலின் ஒப்புதலுக்கு முன் வைக்கப்படும் என தெரிகிறது, மேலும் இக்கூட்டத்தில் எவ்விதமான வரி மாற்றமும் இருக்காது என கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தின் முடிவில் பல மாதங்களாக கிடப்பில் இருந்த ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகளின் விற்றுமுதல் அதாவது Turnover மீது சுமார் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதன் மூலம் ஆன்லைன் கேமிங் துறையில் ஒருவர் 100 ரூபாய் செலுத்துகிறார் எனில் இதில் 28 சதவீத ஜிஎஸ்டி போக 72 ரூபாய்க்கு மட்டும் தான் பெட்டிங் செய்ய முடியும். 72 ரூபாயும் வெற்றி பெற்று திரும்ப எடுக்கிறார் எனில் அவருக்கு platform fees போக 54 ரூபாய் கிடைக்கும். இதில் 30 சதவீதம் டிசிஎஸ் பிடித்தம் உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications