ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் 6 ஆம் தேதி முடிந்த உடன் 7 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் பார்வையற்றோர் வாங்கும் வாகனங்களுக்கு 18% சலுகை வரியை நீட்டிப்பது, பொடியாக விற்கப்படும் தினைகளுக்கு வரி விலக்கு அளிப்பது மற்றும் வங்கி மீதான வரி விதிப்பை தெளிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்ய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் கூடுகிறது.
ஒரு நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் ப்ரோமோட்டர்கள் வழங்கப்படும் கார்ப்பரேட் உத்தரவாதங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட உள்ளது. வரி விகிதங்களைக் கவனிக்கும் கவுன்சிலின் கீழ் உள்ள பிட்மென்ட் குழு, இதுவரையில் வரி விகிதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் பரிந்துரைக்கவில்லை என்பதால் அதரடி அறிவிப்புகள் இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இருக்காது என நம்பப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் தொழில்துறையினர் கொடுத்த பல்வேறு திட்ட கோரிக்கைகளை விவாதத்திற்கு எடுக்க நிராகரிக்கப்பட்டு உள்ளது, மேலும் வரி விகிதத்தை சரி செய்வது குறித்த முடிவை அமைச்சர்கள் குழுவிடம் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் மீதான ஜிஎஸ்டியை 18% லிருந்து 5% ஆகக் குறைப்பது, சிகரெட் மீதான இழப்பீட்டு செஸ் குறைப்பு, வணிக அமைப்புகள் வழங்கும் சேவைகளுக்கு தற்போதைய 18% இலிருந்து 5% ஆக குறைப்பது, விமான இயக்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வேண்டும் வந்த கோரிக்கைகள் விவாதத்திற்கு நிராகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு இந்திய ரயில்வே வழங்கும் அனைத்து சேவைகளையும் முன்னோக்கி கட்டண நெறிமுறையின் (forward charge mechanism) கீழ் கொண்டு வருவதற்கான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது reverse charge mechanism அடிப்படையில் இயங்கி வருகிறது. reverse charge mechanism மூலம் இந்திய ரயில்வே துறை உள்ளீட்டு வரிக் கடன் (Input tax credit) பெற முடியாமல் ஆண்டுக்கு 1,300 கோடி ரூபாய் அளவிலான இழப்புக்கு வழிவகுத்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் 4 ஆம் தேதி துவங்கிய நிலையில் 6 ஆம் தேதி இக்கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்ந்து வந்தாலும் அதன் தாக்கத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு பணிகளை செய்து வரும் வேளையிலும் பணவீக்க அச்சம் குறையாமல் உள்ளது இதனால் ரெப்போ விகிதம் உயருமான என்ற கேள்வி இருந்தாலும், பெரும்பாலான சந்தை கணிப்புகள் ரெப்போ விகிதம் உயராது என்ற நிலையில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications