மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 54வது கூட்டம் டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நிறைவடைந்தது. பல எதிர்பார்ப்புகள் உடன் துவங்கிய இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்களுடன், நிதியமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் இன்று ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல், ரூ.2,000க்கு மேல் ஆன்லைன் பேமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் மற்றும் ரூ.32,400 கோடி இன்ஃபோசிஸின் வரி அறிவிப்பு ஆகியவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன..?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 54வது ஜிஎஸ்டி குழு கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, இக்கூட்டத்தின் ஹைலைட்ஸ் இப்போது பார்ப்போம்.
1. ஆன்லைன் கேமிங் மற்றும் காசினோக்களுக்கு ஜிஎஸ்டி: ஆன்லைன் கேமிங் மற்றும் காசினோக்களுக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இத்துறையில் இருந்து மத்திய அரசுக்கான வரி வருவாய் 412% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
2. மருத்துவ காப்பீட்டு பிரீமியம்: மருத்துவ காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பதற்கான புதிய GoM அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இதனால் இக்கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
3. புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டது. இதனால் கேன்சர் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறைய உள்ளது.
4. ஸ்னாக்ஸ் (நம்கீன்) விலை குறைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்னாக்ஸ் ஜிஎஸ்டி விகிதம் 18%லிருந்து 12% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
5. வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு நிவாரணம்: வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
6. அரசு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு: அரசு நிறுவனங்களால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு ஆராய்ச்சி நிதியம் மீதான ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்.
இதன் மூலம் இனி அரசு நிறுவனங்களால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் தனியார் மற்றும் அரசு அமைப்புகளிடம் இருந்து ஜிஎஸ்டி வரி இல்லாமல் நன்கொடை பெறலாம்.
7. செஸ் மீதான GoM: மார்ச் 2026 வரை செஸ் வசூல் ரூ. 8.66 லட்சம் கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கடன் தவணைகளைச் செலுத்திய பிறகு, இதில் சுமார் ரூ. 40,000 கோடி மிச்சம் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் இழப்பீட்டு செஸ் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மார்ச் 2026க்குப் பிறகு செஸ் வசூல் செய்ய வேண்டுமெனில், அதன் நோக்கம் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிமுறை ஆகியவற்றைத் தீர்மானிக்க GoM அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
8. பிற முடிவுகள்: B2C ஜிஎஸ்டி பில்லிங் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜிஎஸ்டி குழு முடிவு செய்தது. இந்த புதிய முறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். Business-to-Customer (B2C) GST invoicing மூலம் ரீடைல் சந்தையில் வரி வசூல் இன்னும் சிறப்பாக இருக்கும் என தெரிகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications