ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் இந்திய மக்களால் மிகவும் எதிர்பார்க்க கூடிய முக்கியமாந கூட்டமாக மாறியுள்ளது. அடுத்த மாதம் திட்டமிட்டப்பட்டு உள்ள இக்கூட்டத்தில் 12% வரி பலகையை நீக்குவது குறித்து விவாதிக்க உள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரும் மாற்றம் நடக்க இருப்பதாக தெரிகிறது.
12 சதவீத வரி பலகையை நீக்குவது மூலம் வரி அமைப்பை எளிமையாக்குவது மட்டும் அல்லாமல் மக்களுக்கு வரி சுமை குறையும் என்பதால் மக்களால் அதிகம் எதிர்பார்க்க கூடிய கூட்டமாக மாறியுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்ட நிலையில் எந்த இடத்தில் நடத்துவது என்பது குழப்பம் ஏற்பட்ட காரணத்தால் ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்க உள்ளது.

12% வரி பலகை: இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் முக்கிய அஜெண்டாவாக, 12% வரி அடுக்கை குறைப்பது அல்லது நீக்குவது உள்ளது. இதன் மூலம் இப்பிரிவில் இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை 0%, 5%, 18%, மற்றும் 28% உடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
ஆனால் வைரங்களுக்கு விதிக்கப்படும் 0.25%, தங்கம் மற்றும் வெள்ளிக்கு 3% போன்ற சிறப்பு விகிதங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என அரசு தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.
"12% அடுக்கை நீக்குவது, வரி முறையை எளிதாக்கும்," என்று தி இந்து பத்திரிக்கையிடம் ஒரு அரசு உயர் அதிகாரி தெரிவித்தார். அமைச்சர்கள் குழு (GoM) மற்றும் நிபுணர்கள், 12% அடுக்கில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை 5% அல்லது 18% அடுக்குகளுக்கு மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர், இது வருவாய் இழப்பு இல்லாமல் வரி அமைப்பை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தியாளர்களுக்கு சவால்கள்: 12% அடுக்கிலிருந்து பொருட்களை 5% அடுக்கிற்கு மாற்றுவது, உற்பத்தியாளர்களுக்கு சவாலாக இருக்கலாம். 12% விகிதத்தில், உற்பத்தியாளர்கள் உள்ளீட்டு வரி கடன் (ITC) பெற தகுதியுடையவர்கள், ஆனால் 5% அடுக்கிற்கு மாறினால் இந்த சலுகை கிடைக்காது. இதனால், உள்ளீடுகளுக்கு செலுத்தப்பட்ட வரிக்கு கடன் பெற முடியாமல், உற்பத்தி செலவு அதிகரிக்கலாம். இது, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இது பாதப்பை ஏற்படுத்தலாம்.
GST கூட்டம் தாமதம்: ஜிஎஸ்டி கவுன்சில், ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெற வேண்டும் என்ற விதியைப் பின்பற்றி, ஜூன் 2025-ல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், கூட்டத்தின் இடம் குறித்து உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இது ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. கடைசி கூட்டம் டிசம்பர் 2024-ல் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி உருவாகியுள்ளது.
இந்திய பொருளாதாரம்: ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தல், இந்திய பொருளாதாரத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். 12% அடுக்கை குறைப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை குறைத்து, நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
சேவை இடைத்தரகர் வரி விலக்கு: மேலும் சேவை இடைத்தரகர்களுக்கான (Service Intermediaries) வரி நடைமுறைகளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்வது மற்றொரு முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த முடிவு, இத்துறைக்கு ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள நிவாரணத்தை வழங்கலாம், இதனால் சேவை நிறுவனங்களின் செலவு குறைந்து, வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த மாற்றம், இந்தியாவின் சேவைத் துறையை உலகளாவிய போட்டித்தன்மைக்கு ஏற்ப மேம்படுத்த உதவும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications