ஜிஎஸ்டி கூட்டம்: ஆன்லைன் கேமிங் மீது 28% வரி உறுதி.. தமிழ்நாட்டின் தடை தொடரும்- நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மாலை 4 மணிக்கு நடத்திய நிலையில், 6.45 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் தவிர மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பெரும்பாலான தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகக் கலந்துகொண்டனர்.

ஜிஎஸ்டி கூட்டம்: ஆன்லைன் கேமிங் மீது 28% வரி உறுதி.. தமிழ்நாட்டின் தடை தொடரும்- நிர்மலா சீதாராமன்

இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்யப்பட்டதாகவும் குறிப்பாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அளவு மற்றும் தர மேம்பாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறினார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி. இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விவரித்தார்.

கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இது 3 வருடங்கள் அமைச்சர்கள் குழு ஆய்வுகளின் முடிவின் வாயிலாக எடுக்கப்பட்டது, ஆனால் இந்த அறிவிப்பு பெரும் விமர்சனங்களைப் பெற்றது.

கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் தற்போது இருக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 28 சதவீத வரி விதிப்பை மறு ஆய்வு செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் ஆன்லைன் கேமிங் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த வரி விதிப்பு மூலம் தடை நீக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

3 வருடமாக ஆலோசனை செய்யப்பட்டு 50வது ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட வரியை உடனடியாக அமலாக்கம் செய்யப்பட வேண்டும் எனப் பல மாநிலங்கள் வலியுறுத்திய நிலையில், பல மாநிலங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்த வேளையில் இதுகுறித்த ஆலோசனை நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் செய்தியாளர் சந்திப்பு தாமதமானது எனத் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் கசினோவில் அதிகப்படியான வர்த்தகம், வருமானத்தைக் கொண்டு இருக்கும் காரணத்தால் வரி விதிப்பில் முக்கியமான மாற்றங்கள் தேவை எனக் கூறிய நிலையில், இந்தப் புதிய வரிகள் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு 6 மாதத்திற்குப் பின் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான முக மதிப்பில் 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது, இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. உதாரணமாகக் கசினோவில் 1000 ரூபாய்க்கு Chips வாங்கி அதில் 100 ரூபாய்க்கான சிப்ஸ் பெட்டிங் செய்து 300 ரூபாய் மதிப்பிலான சிப்ஸ் வெற்றிபெற்றால் 1200 ரூபாய்க்கு 28 சதவீத வரி விதிக்கப்படாது, 1000 ரூபாய்க்கு தான் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் எப்போது ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் சட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்து உரிய நாள் அறிவிக்கும்.

இதேபோல் தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான தடைக்கு இந்த வரி விதிப்பில் மூலம் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. தமிழ்நாட்டில் தடை தொடரும்.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்தச் சில நாட்களில் ஆய்வுகள், சட்ட விதிகள் மாற்றங்கள் குறித்த ஆலோசனையில் ஆன்லைன் கேமிங்-ல் ஆன்லைன் மணி கேமிங் என்றால் என்ன? கேமிங் மணி என்றால் என்ன? இண்டர்நெட் அல்லது ஈ-நெட்வொர்க் மூலம் இயக்கும் ஆன்லைன் கேமிங் என்றால் என்ன..? போன்ற விளக்கத்தை அளிக்க உள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேன்டசி ஆன்லைன் கேமிங்-ல் உண்மையான பணம் டெபாசிட் செய்யப்படாத பட்சத்தில், அதற்கு வரி இல்லை. இதேபோல் விர்ச்சுவல் அசர்ட் அதாவது பிட்காயின் போனவற்றின் மூலம் ஆன்லைன் கேமிங்-ல் சேவை, பொருட்கள் வாங்கினால் அதற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி பொருந்தும் என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+