பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை மூன்றாவது முறையாக கூடவுள்ளது.
ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்ட நிலையில், நாளையாவது ஒரு முடிவு கிடைக்குமா? அப்ப்டி முடிவுகள் எட்டப்படாத நிலையில் பாஜக அல்லாத எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாளை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு, வழங்க வேண்டிய இழப்பீடு தொகை குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக-வின் ஆதரவு கட்சிகள் ஆட்சி புரிகின்றன. இந்த நிலையில் கொரோனா காலத்தில் மாநிலங்களுகு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை அரசால் சரிவர வழங்க முடியவில்லை. செப்டம்பர் பாதி வரையிலான காலத்தில் மட்டும் இந்த தொகை 97,000 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மத்திய அரசு பரிந்துரைத்த கடன் திரட்டும் முடிவை பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மாநிலங்கள் கடன் பரிந்துரை வேண்டாம். மாற்று வழியை பரிந்துரைக்குமாறும் மத்திய அரசினை வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பானது 2.35 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை மட்டும், 97,000 கோடி ரூபாயாகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த கொரோனா காலத்தில் வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் 1.38 லட்சம் கோடி ரூபாயாகும்.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை இரண்டு விதமாக பரிந்துரை செய்திருந்தது. ஒன்று இழப்பீட்டு தொகையினை ரிசர்வ் வங்கியிடம் கடனாக பெறுவது. இரண்டாவது வெளி சந்தையில் மாநில அரசுகள் திரட்டிக் கொள்ளலாம் என்பது தான். ஆனால் இதற்கு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநில அரசுகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.

ஜிஎஸ்டி பட்டியலில் 5%, 12%, 18% மற்றும் 28% என்ற விகிதங்கள் அடிப்படையில் வரி விகிதங்கள் உள்ளன. இதில் மதுபானம், சிகரெட், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் அதிகளவிலான வரி விகிதங்கள் விதிகப்படுகின்றன.
எது எப்படியோங்க நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஆவது நல்ல முடிவுகள் எட்டப்பட்டால் சரி தான். அது நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications