ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. அனைத்து நிறுவனங்கள், தொழிலதிபர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

ஜிஎஸ்டி வரி விதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டி இன்வாய்ஸ் அதாவது ஜிஎஸ்டி பில்லிங் முறையில் இந்த முறை முக்கிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இப்புதிய மாற்றம் மூலம் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் இன்னும் கூடுதலாக நிறுவனங்கள் வர உள்ளதால் மத்திய அரசுக்கான வரி வசூல் அதிகரிக்கும், அதேபோல் வரி ஏய்ப்பு செய்யப்படுவதையும் பெரிய அளவில் தடுக்க முடியும்.

நிறுவனங்களும், தொழிலதிபர்களும் புதிய மாற்றத்திற்குத் தயாராக வேண்டும்.

ஜிஎஸ்டி பில்

ஜிஎஸ்டி பில்

மத்திய மறைமுக வரி வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி இனி வருடம் 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்றுமுதல் அதாவது Turnover கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி பில் கொடுக்க வேண்டியது கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றம் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் ஜிஎஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது.

5 கோடி ரூபாய் Turnover

5 கோடி ரூபாய் Turnover

ஜிஎஸ்டி நெட்வொர்க் இப்புதிய மாற்றத்தின் மூலம் ஜிஎஸ்டி தளத்தை நிர்வாகம் செய்யும் டெக்னாலஜி நிறுவனத்திடம் டிசம்பர் முதல் அதிகரிக்கும் டிராப்பிக்-ஐ எதிர்கொள்ளும் அளவிற்குத் தளத்தை மேம்படுத்தவும், இதற்கான பணிகளை உடனடியாகச் செய்யவும் உத்தரவிட்டு உள்ளது.

1 கோடி ரூபாய்

1 கோடி ரூபாய்

இது மட்டும் அல்லாமல் அடுத்த நிதியாண்டுக்குள் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களையும் ஜிஎஸ்டி பில்லிங் வளையத்திற்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிஸ் இந்த எலக்ட்ரானிக் பில்லிங் முறையைப் படிப்படியாக அனைத்துப் பிரிவு நிறுவனங்களுக்கும் கொண்டு வந்துகொண்டு இருக்கிறது.

சிறு மற்றும் குறு நிறுவனங்கள்

சிறு மற்றும் குறு நிறுவனங்கள்

இந்தப் பயணத்தின் இறுதியில் நாட்டின் சிறு மற்றும் குறு நிறுவனங்களையும் ஜிஎஸ்டி பில்லிங் முறைக்குள் கொண்டு வரப்பட்டு வகைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.

நல திட்டங்கள்

நல திட்டங்கள்

ஏற்கனவே வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் பல லட்சம் நிறுவனங்களும், பல கோடி ஊழியர்களும் பல்வேறு சலுகை, திட்டங்கள் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இன்சூரன்ஸ், பாதுகாப்பு, பென்ஷன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உள்ளது.

GST INVOICE முறை

GST INVOICE முறை

இந்தியாவில் நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தகத்திற்கு GST INVOICE முறையை அக்டோபர் 1, 2020 முதல் 500 கோடி ரூபாய் வருடந்திர விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்குக் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனவரி 1,2021 முதல் 100 கோடி ரூபாய் விற்று முதல் கொண்ட நிறுவனங்கள் சேர்க்கப்பட்டது.

ஜனவரி 1, 2023

ஜனவரி 1, 2023

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 1, 2021ல் 50 கோடி ரூபாய், ஏப்ரல் 2022 முதல் 20 கோடி ரூபாய் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 1, 2023 முதல் 5 கோடி ரூபாய்க்கு அதிகமான நிறுவனங்கள் இதில் சேர உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+