ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான மென்பொருளில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் வரி தாக்கல் செய்பவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய மறைமுக வரிகள் ஆணையம் நீட்டித்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை முதல் வாட் வரி முறை நீக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே வரி முறை என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரி அமலுக்கு வந்தது. அதற்கான மென்பொருளை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியது.
ஜிஎஸ்டி அமலான பிறகு இன்போசிஸ் தயாரித்த ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் ஒவ்வொரு மாதமும் வரி தாக்கல் செய்யும் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வந்தது. இப்போது ஜிஎஸ்டி அமலாகி 5 ஆண்டுகள் நிறைவாக உள்ள நிலையில் தொழில்நுட்ப கோளாறு மட்டும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு
ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 2பி மற்றும் ஜிஎஸ்டிஆர் - 3பி படிவத்தைத் தாக்கல் செய்ய மே 20-ம் தேதி காலக்கெடு. ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வணிகர்களால் அதை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம்
ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் சிபிஐசி, ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழு ஜிஎஸ்டிஆர்-2பி, ஜிஎஸ்டிஆர்-3பி படிவ சேவையை விரைவில் சரிசெய்வதற்கும் பணியாற்றி வருகிறது என தெரிவித்தது.
காலக்கெடு நீட்டிப்பு
ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 3பி படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 20ம்-தேதியாக இருந்தது. இப்போது அதை மே 24-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளனர்.
உத்தரவு
ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய இன்போசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் சிபிஐசி தெரிவித்துள்ளது.
வருமான வரி இணையதளம்
ஜிஎஸ்டி மட்டுமல்லாமல் இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் உருவாக்கிய புதிய வருமான வரி தாக்கல் இணையதளத்திலும் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வரி தாக்கல் செய்பவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி மென்பொருள் உருவாக்கச் செய்யப்பட்ட செலவு எவ்வளவு?
ஜிஎஸ்டி மென்பொருளை உருவாக்க இன்போசிஸ் நிறுவனம் 1,350 கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்றது. ஆனால் மென்பொருள் உருவாக்கப்பட்டு 5 வருடங்களான பிறகு ஜிஎஸ்டி மென்பொருளில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்
ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வரி செலுத்துவோர்களும் இதைத் தாக்கல் செய்ய வேண்டும். இதில் வெளிப்புற விநியோகங்கள், உள்ளீட்டு வரிக் கடன், வரிப் பொறுப்பு மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் பற்றிய சுருக்கமான விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications