சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் செவ்வாயன்று தனது 50வது கூட்டத்தை டெல்லி விக்யான் பவனில் நடத்தியது. பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கிய இக்கூட்டத்தின் முடிவுகள் மாலையில் வெளியானது.
50வது கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் விற்றுமுதல் அதாவது Turnover மீது சுமார் 28% வரி விதிக்க முடிவு செய்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் முக்கிய அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது, எந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதன் முழு விபரம் இப்போது பார்ப்போம்.
50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு விலை குறையும் பொருட்களின் முழு லிஸ்ட்:
ஜிஎஸ்டி கவுன்சில், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருந்துகள், அரிதான நோய்களுக்கான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி-க்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
செயற்கைக்கோள் ஏவும் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் GST வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
சமைக்கப்படாத மற்றும் வறுக்கப்படாத குடல் அல்லது வத்தல் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
மீன் பேஸ்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
சேலை மற்றும் வேட்டிகளில் பயன்படுத்தப்படும் ஜாரி நூல் மீதான ஜிஎஸ்டி 12% இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
ஸ்டீலின் LD slag மீதான ஜிஎஸ்டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் வரிகளை தற்போது நடைமுறையில் உள்ள 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு விலை அதிகரிக்கும் சேவை:
ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகளின் மொத்த மதிப்புக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications