ஜிஎஸ்டி பிரச்சனை.. காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. பகல் கொள்ளையால்ல இருக்கு.. நீதிபதிகள் சுளீர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகமதாபாத்: கொரோனா வந்த பிறகு அரசு ஜிஎஸ்டி வசூலில் மிகுந்த கவனம் செலுத்த தொடங்கியுள்ளது எனலாம். ஏனெனில் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு பிறகு முக்கால்வாசிக்கும் அதிகமான தொழிற்துறை முடங்கியது.

இதனால் ஜிஎஸ்டி வருவாயானது தரை தட்டியது. இதனால் மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டினையும் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது அரசு. அந்த சமயத்தில் ஜிஎஸ்டி முறைகேடு பற்றிய அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.

 கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..!! கொரோனா கொடுமை.. 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர்..!!

இதற்கிடையில் தான் ஜிஎஸ்டி பற்றிய கறாரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசும் மற்றும் கலால் வரித்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கார் பறிமுதல்

கார் பறிமுதல்

இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கைக்கு மத்தியில் தான், ராஜ்கோட்டினை சேர்ந்த தொழிலதிபரின் எஸ்யூவி காரினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையில் இது குறித்து அந்த தொழிலதிபரும் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இது ஒரு கொள்கை

இது ஒரு கொள்கை

இந்த வழக்கினை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம் நீதிபதிகள் இந்த சம்பவத்தினை ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களால் செய்யப்படும் கொள்ளை (dacoity) என சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து தலைமை நீதிபதி விக்ரம் நாத் மற்றும் ஆர் எம் சாயா, ஜிஎஸ்டி பறக்கும் படை அதிகாரிகளை விரைவில் இது குறித்த அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும் எச்சரித்துள்ளனர்.

பறிமுதலுக்கு எதிராக வழக்கு

பறிமுதலுக்கு எதிராக வழக்கு

கடந்த பிப்ரவரி மாதம் மோர்பியை சேர்ந்த ராகேஷ் சரஸ்வதியா இந்த சம்பவம் குறித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் டிரக் பொருட்கள் அனைத்தும், பிப்ரவரி 16ம் தேதியன்று பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராகேஷையும் இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

என்னென்ன பறிமுதல்

என்னென்ன பறிமுதல்

மேலும் ராகேஷின் ராஜ்கோட் மற்றும் மோர்ப்யில் உள்ள அவரது அலுவலத்தினை சோதனை செய்யும் முன்பே, அவருடைய எஸ்யூவியூ கார் மற்றும் ஏழு மொபைல் போன்கள் மற்றும் மூன்று டைரிகளையும் பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் ராகேஷ் தனது எஸ்யூவி காரையும் மொபைல் போன்களையும் திரும்ப கொடுக்குமாறும் உயர் நீதிமன்றத்தினை அணுகியுள்ளார். இதன் பின்னர், அவர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை செலுத்திய பின்னர் அவரது டிரக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளை என்ன செய்யலாம்?

அதிகாரிகளை என்ன செய்யலாம்?

எனினும் இந்த பறிமுதலை செய்த உதவி ஆணையர், கூட்டு ஆணையர், மற்றும் இந்த பறிமுதலுக்கு அங்கீகாரம் பெறாதவர்கள் என தெரிய வந்துள்ளது. அங்கீகாரம் இந்த அதிகாரியை என்ன செய்யலாம் மாநில அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிபதி கடும் விமர்சனம்

நீதிபதி கடும் விமர்சனம்

மேலும் இது குறித்து தலைமை நீதிபதி ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களால் செய்யப்படும் கொள்ளை (dacoity) என்று விமர்சித்தவர், இந்த வழக்கில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார். யார் ஒரு ரெய்டு நடத்த முடியும், அதன் பிறகு யார் பறிமுதல் முடியும். அப்படி அதிகாரம் பெறாமல் ஒரு வீட்டிற்குள் நுழைந்தால் அது அத்து மீறல், அது கொள்ளை. ஐந்து பேருக்கும் மேல் இருந்தால் அது கொள்கை என்றும் விமர்சித்துள்ளார்.

மீண்டும் விசாரணை எப்போது?

மீண்டும் விசாரணை எப்போது?

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட எஸ்யூவி காரை வெளியிடத் தயாராக இருப்பதாக அம்மாநில தெரிவித்துள்ளது. மேலும் இந்த பறிமுதலில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொரோனா தொற்று என்பதால், இதனை ஒரு வாரத்திற்குள் செய்யுமாறும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இரண்டு வாரங்களில் சம்பந்தபட்ட துறை பதிலளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு ஒத்தி வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST officials seize SUV car: it’s pure dacoity, says Gujarat HC

GST updates.. GST officials seize SUV car: it’s pure dacoity, says Gujarat HC
Story first published: Friday, May 7, 2021, 14:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X