ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சிறு தானியங்களின் மாவு மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அளவு தடாலடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இந்திய மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை ஊக்குவித்து வரும் வேளையில் ஜிஎஸ்டி கவுன்சில் இதை பிரதிபலிக்கும் வகையில் வரியை தடாலடியாக குறைத்துள்ளது.

சிறு தானியங்களின் மாவு மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அளவை தற்போதைய 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ANI தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த உடன் செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கும் வேளையில், இதுகுறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகும்.
சிறு தானியங்கள் ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக பெரிதும் அறியப்படும் ஒன்று. மக்கள் மத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சிறு தானியங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள துவங்கியுள்ளனர். இதை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையிலும், சிறு தானியங்கள் பல வகையில் சாப்பிடும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுத் தேர்வுகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இணைகிறது. இதன் மூலம், சிறு தானியங்களின் நுகர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கும், இது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் விவசாயிகளுக்கும் அதிகளவில் பலன் அளிக்கும்.


Click it and Unblock the Notifications