UPI என அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது, இச்சேவையை அறிமுகம் செய்யும்போது மக்கள் இதை ஏற்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. ஆனால் இதை அறிமுகம் செய்யப்பட்ட காலகட்டத்தில் ஜியோ, ஏர்டெல் அறிமுகம் செய்த மலிவான மொபைல் டேட்டா திட்டங்களும், 4ஜி சேவையும், மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை UPI பயன்பாட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது.
தற்போது பெட்டிக்கடை முதல் நகை கடை, கார் ஷோரூம் வரையில் யூபிஐ சேவை உள்ளது. இதை எளிதாக பயன்படுத்த முடியும் என்பதால் இளம் தலைமுறையினர் முதல் மூத்த குடிமக்களும் பயன்படுத்துகின்றனர். UPI சேவை தற்போது கட்டணம் ஏதும் இன்றி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடிவதால், பலதரப்பட்ட நிதிப் பரிமாற்றங்களுக்கு யூபிஐ வாயிலாகச் செய்யப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 24.77 லட்சம் கோடி ரூபாய். நாடு முழுவதும் யுபிஐ சேவை மிகவும் பரவலாக, அனைத்து தரப்பு மக்களும், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் இதன் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தியில், 2,000 ரூபாய்க்கு அதிகமான தொகை கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் GST விதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்னும் சில செய்திகளில் 5 சதவீதம் ஜிஎஸ்டி என்றும், டிஜிட்டல் வேலெட் சேவை பரிமாற்றத்திற்கு தான் ஜிஎஸ்டி வரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பல முறை யூபிஐ சேவை மீது வரி விதிப்பது குறித்து கருத்து எழுந்த போது அதை மறுத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முறை யூபிஐ மீது ஜிஎஸ்டி விதிக்கும் கருத்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. யூபிஐ சேவை மூலம் மக்கள் கையில் பணப்புழக்கம் என்பது குறைந்து வருவதை பார்க்க முடிந்தாலும் பணமதிப்பிழப்புக்குப் பின்பு மக்கள் மத்தியில் பண புழக்கம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
யூபிஐ மீதான ஜிஎஸ்டி தகவல் வெறும் வதந்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர், இதேபோல் மத்திய நிதியமைச்சகமும் இதுகுறித்து எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாத நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது மத்திய நிதியமைச்சகம்.
விளக்கம்: மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை PIB பொதுமக்களுக்கு வெளியிட்டது. இதில் மத்திய நிதியமைச்சகம் யூபிஐ மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்திகளை "பொய்யானவை, தவறானவை மற்றும் எந்தவித ஆதாரமும் இல்லாதவை" என்று குறிப்பிட்டுள்ளது, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த அறிக்கையில் "ரூ.2,000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை மற்றும் எந்தவித அடிப்படையும் இல்லாதவை. தற்போது, அரசாங்கத்தின் முன் இத்தகைய எந்த பரிந்துரையும் இல்லை." என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவித GST வரியும் விதிக்கப்படாது என்பதை அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
யுபிஐ சேவைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுமா, அப்படி விதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நிபுணர்களின் கருத்தோடு ஆராய்வோம்.
மிரா மணியின் (MIRA Money) இணை நிறுவனர் ஆனந்த் கே.ரதி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று கருதுவது தவறானது என்று கூறினார்.
மாறாக, ஃபோன்பே (PhonePe), கூகிள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ கட்டண சேவைகளை வழங்கும் தளங்கள் கட்டணம் வசூலிக்கத் தொடங்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார். அப்படி ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டால், அந்த கட்டணத்தின் மீது 18 சதவீதம் சேவை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும் அவர் கூறுகையில், யுபிஐ என்பது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு அல்லது ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு நிதி பரிமாற்றம் செய்யும் முறை. பெரும்பாலான வங்கி பரிமாற்றங்கள் இலவசமாகவே நடைபெறுகின்றன.
இருப்பினும், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பரிவர்த்தனைகள் மேற்கொண்டாலோ அல்லது வேறு வங்கிக்கு நிதி அனுப்பும்போதோ சில சமயங்களில் கட்டணம் விதிக்கப்படுகிறது.
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜிஎஸ்டி என்பது மொத்த பரிமாற்றத் தொகைக்கு விதிக்கப்படாமல், பரிமாற்றத்துடன் தொடர்புடைய சேவை கட்டணத்திற்கு மட்டுமே விதிக்கப்படும். எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம், அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரையில் காத்திருப்போம் என்று தெரிவித்தார்.
ஏதேனும் புதிய ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், அது யூபிஐ தங்கள் வசூலிக்கும் சேவை கட்டணத்திற்கு மட்டுமே இந்த வரி பொருந்தும், முழு பரிவர்த்தனை தொகைக்கும் பொருந்தாது என்று உறுதியாக கூறுகிறார். ஆனால் இந்த கட்டணம் இறுதியில் மக்களிடம் இருந்து தான் வசூலிக்கப்படும், இதேவேளையில் P2P சேவையில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபின்கேடாவின் (Finkeda) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மணீஷ் குமார் கோயல் இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்தார். அப்படி ஒருவேளை யுபிஐக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், அது இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சேவை விரிவாக்கத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று அவர் கூறினார். யுபிஐ தற்போது நகரங்களை காட்டிலும் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வரி விதிப்பு இதற்கு பெரும் தடையாக இருக்கும் என தெரிவித்தார்.
இதேவேளையில் கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சிறு வணிகர்களிடையே குறைந்த மதிப்புள்ள BHIM-UPI P2M (பர்சன்-டு-மெர்ச்சன்ட்) பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த ஊக்க திட்டத்தின்படி, சிறு வணிகர்களுக்கான அனைத்து தனிநபர்-வணிகர் (P2M) பரிவர்த்தனைகளும், ரூ.2,000 வரை இருந்தால் அதற்கு பூஜ்ஜிய கட்டணம் அல்லது பூஜ்ஜிய மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) கட்டணம் மற்றும் 0.15% ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்த நடவடிக்கை, சிறு வணிகர்கள் டிஜிட்டல் கட்டண முறைகளை அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பரவலையும், சிறு வணிகர்களின் வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை திட்டம், குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களில் உள்ள வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
More From GoodReturns

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications