ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஒரு நாள்தான் இருக்கிறது.. கைவிரித்த வெப்சைட்.. கடுப்பில் மக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த 01 ஜூலை 2017-ல் இந்திய மறைமுக வரி முறையின் முக்கிய திருப்பமாக ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை நாடு முழுக்க கொண்டு வந்ததது மத்திய அரசு.

 

ஆனால் இன்று வரி ஜிஎஸ்டி வரிப் படிவங்கள் சார்ந்த பிரச்னைகள் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்த பிரச்னைகளை மத்திய அரசு தன்னால் முடிந்த வரை சரி செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் இப்போதும் சூழல் அரசுக்கு சாதகமாக இல்லை.

 
ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஒரு நாள்தான் இருக்கிறது.. கைவிரித்த வெப்சைட்.. கடுப்பில் மக்கள்

ஜிஎஸ்டிஆர் -3 பி படிவங்களை முறையாக தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் ஜிஎஸ்டி போர்டல் இன்று செயலிழந்து நிற்கிறது.

தங்கள் ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்ய முடியாமல், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஜிஎஸ்டி படிவங்களைச் சமர்பிக்கும் வலைதளம், செயல்படாமல் இருப்பதை, பல தரப்பினரும் தங்கள் டுவிட்டரில் குறிப்பிட்டு புகார் எழுப்பி இருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி போர்டலை திறந்ததும், "இங்கு சில பிரச்சினை உள்ளது. தடங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் பொறுமை பாராட்டத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வரி செலுத்துவோர் தங்கள் ஜிஎஸ்டிஆர் -3 பி மாதாந்திர வருவாய் படிவங்களை புதன்கிழமைக்குள் தாக்கல் செய்தாக வேண்டும். போர்டல் பிரச்சினையால், ஜிஎஸ்டிஆர் - 3பி படிவங்களை சமர்பிக்க, காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக, அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.

இதற்கிடையில், வரி செலுத்துவோர் ட்விட்டரில் தங்கள் இக்கட்டான நிலை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். பல டுவிட்டர் பயனர்கள் ஜிஎஸ்டி போர்ட்டலின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்து வெளியிட்டனர்.

பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் 19 மற்றும் 20வது தேதி மோசமான நாளாக மாறி விடுகிறது. ஜிஎஸ்டி படிவங்களை முழுமையாக நிரப்பி சமர்பிக்க, மீண்டும் மீண்டும் லாகின் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த நிலைமை நாள் முழுவதும் தொடர்கிறது என்கிறார் ஒரு நெட்டிசன். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய் ஜிஎஸ்டிஆர் 3பி (#GSTR3B) என டிவிட்டரில் டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST portal crashes a day before monthly return deadline

The GST portal crashed on Tuesday with only one day left to file the GSTR-3B return form.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X