டெல்லி: தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தான் அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்தியர்கள் முன்கூட்டியே தங்களுக்கு தீபாவளி வந்துவிட்டதாக கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களின் விலையை குறைத்து இருக்கிறது.
மாத பட்ஜெட்டில் சேமிப்பு: இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாம் வீட்டில் தினமும் உபயோகப்படுத்தக்கூடிய மளிகை சாமான்கள் , குழந்தைகளுக்கான ஸ்டேஷ்னரி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ,மருந்துகள் என பலவற்றின் விலையையும் குறைத்திருக்கிறது. இது சாமானிய மக்களின் பட்ஜெட்டில் கணிசமாக ஒரு ஒரு சேமிப்பை கொண்டு வரும் . அது எப்படி என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மளிகை பொருட்கள்: பால், பன்னீர், ரொட்டி, பராத்தா, பீட்சா பிரெட் ஆகியவற்றுக்கு இனி ஜிஎஸ்டி வரியே கிடையாது. எனவே இவற்றின் விலை குறையும். இதில் பால் நாம் தினமும் வாங்கி பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் என்பதால் நம்முடைய மாதாந்திர பட்ஜெட்டில் இதுவே கணிசமான அளவு சேமிப்பை ஏற்படுத்தி தரும். இது தவிர நெய், வெண்ணெய், ஜாம், சாஸ், பாஸ்தா உள்ளிட்டவற்றின் ஜிஎஸ்டி வரியும் தற்போது ஐந்து சதவீதமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதேபோல பாதாம், முந்திரி பிஸ்தா, சீஸ், சாக்லேட், காஃபி, ஐஸ்கிரீம், பிஸ்கட், உள்ளிடவையும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது . எனவே ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு நான்கு ஆயிரம் ரூபாய்க்கு இந்த பொருட்களை வாங்குகிறது என வைத்துக் கொள்வோம் அவர்களுக்கு இனி 400 முதல் 500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
பர்சனல் கேர் பொருட்கள்: சோப், ஷாம்பூ ,கேச பராமரிப்பு எண்ணெய் , டூத் பேஸ்ட், டால்கம் பவுடர், மெழுகுவர்த்தி , ஷேவிங் கிரீம், லோஷன், பற்பொடி, சீப்பு உள்ளிட்டவையும் ஐந்து சதவீத வரி விதிப்பின் கீழ் வந்து விட்டது. எனவே மாதந்தோறும் இதில் நமக்கு 80 ரூபாய் வரை சேமிக்க முடியும் .
குழந்தைகளுக்கான பொருட்கள்: வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் கட்டாயம் குழந்தைகளுக்காக நாம் வாங்கக்கூடிய பொம்மைகள், பள்ளி செல்லும் குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு வாங்கக்கூடிய ஸ்டேஷனரி பொருட்களும் வரி விலக்கு பெற்றிருக்கிறது. எனவே அதற்காக நாம் செலவிடும் தொகையும் குறைய போகிறது .
ஹோட்டல் உணவு: பெரும்பாலான குடும்பங்கள் மாதத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது உணவகத்தில் சென்று உணவருந்துகிறார்கள். உணவகங்களில் விற்கப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பம் சராசரியாக மாதத்திற்கு இரண்டு முறை உணவகத்தில் சென்று உணவு அருந்துகிறது 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறது என வைத்துக் கொண்டால் இனி அதில் 400 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
மருத்துவம்: 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு தரப்பட்டிருக்கிறது. பல்வேறு மருந்துகள் மற்றும் சர்க்கரை பரிசோதிக்க கூடிய மருத்துவ கருவி, சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள் உள்ளிட்டவையும் 5 சதவீத வரி விதிப்பின் கீழ் வந்துவிட்டன. எனவே பல்வேறு மருந்துகள் மற்றும் மருந்துகளின் செலவு குறைகிறது. மருத்துவ காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு குடும்பம் மாதம் தோறும் மருந்துகளுக்காகவும் காப்பீடுகளுக்காகவும் சராசரியாக 3 ஆயிரம் ரூபாய் செலவழிக்கிறது என வைத்துக் கொண்டால் அவர்கள் இனி மாதம் 300 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
சராசரியாக ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் 1000 ரூபாய் முதல் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் மூலம் நம் பட்ஜெட்டில் சேமிக்க முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications