கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று டெல்லியில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டம், இந்தியாவின் மறைமுக வரி அமைப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இக்கூட்டம் 2 நாள் நடக்க திட்டமிட்டு இருக்கும் வேளையில் முதல் நாள் இறுதியில் ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டப்படி 4 வரி பலகை கொண்ட ஜிஎஸ்ட் கட்டமைப்பு, 2 பலகையாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் நீக்கப்பட்ட 2 பலகையில் இருக்கும் பொருட்கள் மற்ற இரு பலகைக்கு மாற்றப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன் நடைமுறைக்கு வரும்.

மேலும் இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மாற்றங்கள் மூலம் எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பதை முழுமையாக பார்ப்போம்.
விலை குறையும் பொருட்களின் முழு விபரம்:
28% வரியில் இருந்து 18% வரி
எலக்ட்ரானிக்ஸ்: நுழைவு நிலை மற்றும் அதிகமாக பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
18% வரியில் இருந்து 5% வரி
ஸ்னாக்ஸ்: நம்கீன், புஜியா, மிக்சர், சபீனா
பானங்கள்: சர்க்கரை அல்லது இனிப்பு சேர்க்கப்படாத குடிநீர், ஏரேட்டெட் வாட்டர்
ஹெல்த்கேர்: சில உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள்
அழகு / தனிநபர் பராமரிப்பு: ஹேர் ஆயில், ஷாம்பு, டென்டல் பிலாஸ், டூத்பேஸ்ட்
விவசாயம்: சில உரங்கள் (18% இலிருந்து 5% ஆக)
12% வரியில் இருந்து 5% வரி
பால் பொருட்கள்: கண்டென்ஸ்டு பால், வெண்ணெய், நெய், பன்னீர், சீஸ்
உணவு பொருட்கள்: மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃபிளேக்ஸ், பிஸ்கட்ஸ், சாக்லேட்ஸ், கோகோ பொருட்கள்
ட்ரை ப்ரூட்ஸ் & நட்ஸ்: பாதாம், பிஸ்தா, ஹேசல்நட்ஸ், முந்திரி, பேரிட்சை
விவசாயம்: விதைகள் மற்றும் பயிர் ஊட்டச்சத்து போன்ற சில உள்ளீடுகள் (12% → 5%)
டெக்ஸ்டைல் & புட்வேர்: காலணிகள் மற்றும் நெசவு பொருட்கள்
பிற பொருட்கள்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள், கட்டுமான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள்
12% அல்லது 18% வரியில் இருந்து 5% அல்லது 0% வரி
ஹெல்த்கேர்: உயிர்காக்கும் மருந்துகள், உடல்நலம் சார்ந்த பொருட்கள், சில மருத்துவ சாதனங்கள்
5-12% வரியில் இருந்து 0% அல்லது 5% வரி
கல்வி துறை: கல்வி சேவைகள், புத்தகங்கள், learning aids
5% வரியில் இருந்து 0% வரி
பால் பொருட்கள்: UHT பால் (முன்பு 5% → இப்போது முழுமையாக விலக்கு)
பிற மாற்றங்கள் (5% இலக்க பிரிவு)
சர்க்கரை பொருட்கள்: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரை சிரப், டாஃபி, கேண்டி (5% விகிதம்)
இதர உணவு பொருட்கள்: சமையல் எண்ணெய், விலங்கு கொழுப்பு, edible spreads, சாசேஜஸ், மாமிச தயாரிப்புகள், மீன் பொருட்கள், மால்ட் எக்ஸ்ட்ராக்ட் அடிப்படையிலான பேக்கேஜ் உணவுகள் (5% விகிதம்)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications