டெல்லி: மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு: மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதங்களை நான்கில் இருந்து இரண்டாக குறைக்க பரிந்துரை செய்திருக்கிறது. இந்தியாவில் இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு பரிந்துரைத்திருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு கூட்டமும் அரசின் பரிந்துரையை ஏற்றிருக்கிறது . இதனை அடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரை மீது ஆலோசனை நடத்தப்பட்டு இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்க வேண்டும்.

விலை குறையுமா?: அவ்வாறு நடைமுறைக்கு வந்தால் பிரதமர் மோடி கூறியதை போலவே தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்தியாவில் பல்வேறு பொருட்கள் மீதான விலையும் குறையும். அந்த வகையில் முக்கியமான முடிவை எடுக்கும் பொறுப்பு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திடம் தான் இருக்கிறது. 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதித்துறை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்த இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய கூட்டத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்திருத்த பரிந்துரை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்.
என்ன ஆலோசனை: ஜிஎஸ்டி வரி விகிதங்களை இரண்டாக குறைப்பது காம்பன்சேஷன் வரியை நீக்குவது , ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி முழுமையாக நீக்குவது உள்ளிட்டவை குறைத்து முக்கியமான ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் . எனவே இந்தியர்களுக்கு செப்டம்பர் 3 மற்றும் 4ஆகிய இரண்டு தேதிகளும் மிக முக்கியமானவை இந்த தேதியில் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலைவாசி உயருமா இல்லையா என்பதை முடிவு செய்பவையாக இருக்கும்.
பிரதமர் மோடி: 2017ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது. தற்போது பல்வேறு சேவைகளுக்கும் பொருட்களுக்கும் 5 %, 12 %, 18 % மற்றும் மற்றும் 28% என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் தான் மிகப்பெரிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதை பிரதமர் நரேந்திர மோடியே தன்னுடைய சுதந்திர தின உரையில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து நிதித்திறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர்கள் குழுவுக்கு ஜிஎஸ்டி வரி கட்டமைப்பை 5% மற்றும் 18% என கொண்டு வரவும், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தது.


Click it and Unblock the Notifications