இந்தியாவில் கடந்த மே, ஜூன் மாதங்களில் எல்லாம் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் நிறைய வாகனங்களை தயாரித்து வைத்திருக்கிறோம் மக்கள் வாங்க முன் வரவில்லை என புலம்பி வந்தனர். ஆனால் தற்போது டிமாண்டை பார்த்தால் உற்பத்தி செய்து இருக்கும் வாகனங்கள் பத்தாது போல் இருக்கே என பேசும் அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டம் யாருக்கு சிறப்பானதாக இருந்தது இல்லையோ வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியாவில் சிறிய ரக கார்கள் மற்றும் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியும் பிரீமியம் ரக வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியும் மாற்றி அமைக்கப்பட்டது.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விடுகிறோம் என அறிவித்தன. இதன் மூலம் பல்வேறு கார்கள் பைக்குகளின் விலையும் கணிசமாக குறைந்தன. ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒருபுறம் பண்டிகை கால தள்ளுபடி மறுபுறம் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசின. அது இந்த ஆண்டு சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது .
இந்தியாவில் செப்டம்பர் 22ஆம் தேதி அன்றுதான் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது அன்றுதான் நவராத்திரி பண்டிகையும் தொடங்கியது .அந்த 22 ஆம் தேதி தொடங்கி முப்பதாம் தேதி வரை வாகன வாகன விற்பனை என்பது வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததாக இந்திய வாகன டீலர்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
அதாவது கடந்தாண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது வாகன விற்பனை 34 சதவீதம் அதிகரித்து இருக்கிறதாம். இதில் பயணிகள் வாகன விற்பனை 34.8% , இருசக்கர வாகன விற்பனை 36 சதவீதமும் உயர்ந்திருக்கிறதாம். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தமே இதற்கு முக்கிய காரணம் என வாகன விற்பனை டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
செப்டம்பர் 21ஆம் தேதி வரை விற்பனை மந்தமாகவே இருந்தது என்றும் செப்டம்பர் 2 2ஆம் தேதிக்கு பிறகு விற்பனை சூடு பிடித்தது என்றும் நிறுவனங்கள் கூறுகின்றன. இந்திய ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் துணைத் தலைவரான சாய் கிரிதர் அளித்துள்ள பேட்டியில் 2025 ஆம் ஆண்டு நவராத்திரி வாகன விற்பனை நிறுவனங்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறியிருக்கிறது மிகப்பெரிய ஒரு விற்பனையை கொண்டு வந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
முதன்முறையாக இந்த பண்டிகை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாகனங்கள் குறித்து கேட்டறிவதற்காக ஷோரூம்களுக்கு வருகை தந்தார்கள், வாகன விற்பனையும் 34 சதவீதம் அதிகரித்து இருக்கிறது இதற்கு முன்பு எந்த ஒரு பண்டிகை காலத்திலும் இப்படி ஒரு வாகன விற்பனை இருந்ததில்லை எனக் கூறியிருக்கிறார். அடுத்ததாக தீபாவளி பண்டிகையிலும் வாகன விற்பனை அதிகரிக்கும் என டீலர்கள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications