பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது அரசு ஜிஎஸ்டி வரியில் பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வரப் போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய அரசு தரப்பில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விகிதங்களை நான்கிலிருந்து இரண்டாக குறைக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டது. இந்த பரிந்துரை மீது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆலோசனை நடத்தி வருகிறது. இன்றும் நாளையும் நடக்கக்கூடிய இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறையுமா? குறையாதா? என்ற முடிவை தீர்மானிக்க போகிறது.

மத்திய அரசினை பொருத்தவரை 12 % மற்றும் 28 % ஆகிய இரண்டு ஜிஎஸ்டி விகிதங்களையும் முழுவதுமாக நீக்கிவிட வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி 12% ஜிஎஸ்டி வரியை நீக்கினால் அதில் இருக்கக்கூடிய பெரும்பாலான பொருட்கள் 5% வரி விகிதத்தின் கீழ் வந்துவிடும். எனவே தானாகவே அவற்றின் விலை குறைந்துவிடும் . அதேபோல 28 % ஜிஎஸ்டி வரி விகிதம் நீக்கப்படும் போது அதன் கீழ் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்துமே 18 % ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் வந்துவிடும். எனவே அந்த பொருட்களின் விலை 10% வரை குறையும்.
இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்கள் விலை குறைவை காண இருக்கிறது. தற்போது இந்தியாவில் என்னென்ன பொருட்களின் விலை குறைய போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பால் சம்பந்தப்பட்ட பொருட்கள்: பால் பவுடர் , நெய், வெண்ணெய் , condensed milk இவை அனைத்தும் 12% வரி விகிதத்தில் இருந்து 5% என்ற வரி விதிப்பின் கீழ் வரும் என சொல்லப்படுகிறது. எனவே இவற்றின் விலை 7% வரை குறைய இருக்கிறது. அதாவது 100 ரூபாய் விலை கொண்ட பொருளை நாம் தற்போது 12% ஜிஎஸ்டியால் 112 ரூபாய் என விலை கொடுத்து வாங்குகிறோம், அதுவே 5% வரியின் கீழ் வந்தால் 100 ரூபாய் பொருளுக்கு ஜிஎஸ்டி உடன் சேர்த்து 5 ரூபாய் என 105 ரூபாய் செலுத்தினால் போதும்.
உணவு பொருட்கள்: சாக்லேட்,பேரீச்சம்பழம், நட்ஸ் மற்றும் டிரைட் ஃப்ரூட்ஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட திண்பண்டங்கள், நூடுல்ஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆகியவையும் 12%இல் இருந்து 5% ஜிஎஸ்டிக்குள் வர இருக்கிறது எனவே இவற்றின் விலை குறையும்.
மருந்துகள்: இந்தியாவில் சில வகை மருந்துகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது அது 5%இன் கீழ் வந்தால் விலை குறையும். சில மருத்துவ உபகரணங்களின் விலையும் குறையும்.
காலணிகள்: சில வகை காலணிகள் மற்றும் துணிமணிகளும் 12% ஜிஎஸ்டியில் இருந்து 5%இன் கீழ் வருகின்றன. எனவே அவற்றின் விலை 7% குறைய போகிறது.
விவசாயம்: உரங்கள் மற்றும் வேளாண்மையில் பயன்படுத்தப்படக்கூடிய சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5%ஆக கொண்டு வரப்பட இருக்கிறது என்பதால் அவற்றின் விலையிலும் நாம் பெரிய அளவிலான மாற்றத்தை பார்க்க முடியும்.
வேறு என்ன பொருட்கள்: சைக்கிள், பென்சில், கண் கண்ணாடி ஆகியவையும் 5% வரியின் கீழ் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அடுத்ததாக 28% என்ற வரி விதிப்பையே முழுமையாக நீக்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது இவ்வாறு நீக்கப்படும் பட்சத்தில் 28% வரி விதிப்பின் கீழ் இருக்கக்கூடிய பல்வேறு பொருட்களும் 18% வரி விதிப்பின் கீழ் வந்துவிடும். எனவே இந்த பொருட்களின் விலையில் 10% வரை குறைய போகிறது.
என்னென்ன பொருட்கள் : ஏசி, டிவி, வாஷிங் மெஷின், டிஷ் வாஸர், ஃபிரிட்ஜ் ஆகியவை 28% வரி விதிப்பில் இருந்து 18%இன் கீழ் வந்துவிடும்.எனவே அவற்றின் விலை10% குறையும். உதாரணமாக 30000 ரூபாய் மதிப்புள்ள வாஷிங் மெஷினுக்கு 28% ஜிஎஸ்டியாக 8400 ரூபாய் சேர்த்து 38400 ரூபாயாக செலுத்த வேண்டியுள்ளது. தற்போது இந்த வரி விகிதம் என்பது 28 லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்பதால் 30,000 ரூபாய் மதிப்பிலான ஒரு வாஷிங்மெஷினுக்கு நாம் 5,400 மட்டுமே ஜிஎஸ்டியாக செலுத்தினால் போதும் நமக்கு 3 ஆயிரம் ரூபாய் இதன் மூலம் சேமிக்கப்படுகிறது .
கார்கள், பைக்குகள்: சிறிய வகையிலான கார்கள் மற்றும் குறைந்த இன்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களும் 28% வரி விதிப்பில் இருந்து 18 % வரி விதிப்பின் கீழ் வருகின்றன எனவே அவற்றின் விலையிலும் 10 சதவீதம் வரை நம்மால் விலை குறைவை காண முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications