GST விவகாரம்: மத்திய அரசு கடன் வாங்கி மாநிலங்களுக்கு பணம் கொடுப்பது ஆர்பிஐ விருப்பமாக இருக்கலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் & ஜிஎஸ்டி நஷ்ட ஈட்டுத் தொகைக்கு பதிலாக, இரண்டு கடன் ஆப்ஷன்களைக் கொடுத்து இருக்கிறது. அந்த இரண்டு ஆப்ஷன்கள் என்ன? இந்த இரண்டு ஆப்ஷன்களில் இருக்கும் வேறுபாடுகள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

GST விவகாரம்: மத்திய அரசு கடன் வாங்கி மாநிலங்களுக்கு பணம் கொடுப்பது ஆர்பிஐ விருப்பமாக இருக்கலாம்!

ரூ. 97,000 கோடி திட்டம்

1. இந்த முதல் திட்டத்தின் கீழ், எல்லா மாநிலங்களும் இணைந்து 97,000 கோடி ரூபாயை, ஆர்பிஐயின் சிறப்புத் திட்டத்தின் (special RBI window) கீழ் கடனாக பெறலாம். 2. இந்த வழியில் பெறும் கடனை, மாநிலங்கள் கடன் பெற்றதாக கருதப்படாது.
3. மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சொல்லி இருக்கும் கடன் அளவுகளுக்குள் இது வராது.
4. இந்த திட்டம் வழியாக கடன் பெற்றால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மாநிலங்களுக்கு பணம் கிடைக்கும்.
5. இந்த திட்டத்தின் வழியாக பெறும் கடனுக்கான வட்டியை, அரசு வெளியிடும் ஜி செக் பாண்டுகளுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள மத்திய அரசு முயற்சிக்கும்.
6. ஒருவேளை கடனுக்கான வட்டி அதிகரித்தால், ஜி செக் பாண்டுகள் மற்றும் மாநில மேம்பாட்டு கடனுக்கு மத்தியில் இருக்கும் வட்டி விகிதத்தில் 0.5% வரை மத்திய அரசு, மானியம் வழியாக கொடுக்குமாம்.

ரூ. 2.35 லட்சம் கோடி திட்டம்

1. இந்த இரண்டாவது திட்டத்தின் வழியாக, எல்லா மாநிலங்களும் இணைந்து 2.35 லட்சம் கோடி ரூபாய் வரை, நேரடியாக சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு & ஆர்பிஐ உதவும்.
2. இந்த திட்டம் வழியாக மாநிலங்கள் வாங்கும் கடன் தொகையில், அசல் தொகையை, மத்திய அரசு, திருப்பிக் கொடுக்கும். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு ஜிஎஸ்டி செஸ் நீட்டிக்கப்பட்டு திருப்பிக் கொடுக்கப்படுப்பார்களாம்.
3. ஆனால், இந்த கடனுக்கான தவணைகளை மாநில அரசு, தங்கள் சொந்த காசிலேயே செலுத்த வேண்டும்.
4.ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகை மட்டுமே கடனாக கருதப்படாது. அதற்கு மேல் மாநிலங்கள் கூடுதலாக இந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கினால், அதை மத்திய அரசு கடனாக கணக்கில் எடுத்துக் கொள்ளுமாம்.

மத்திய ரிசர்வ் வங்கி

மத்திய அரசு, கடன் வாங்கி மாநிலங்களுக்கு பணம் கொடுப்பதை ஆர்பிஐ விரும்பலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் செளம்ய காந்தி கோஷ், எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார். ஹெச் டி எஃப் சி வங்கியின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அபீக் பருவா (Abheek Barua) அவர்களும் செளம்ய காந்தி கோஷின் வாதத்தை ஆமோதித்து இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST: RBI may prefer center borrowing from the market and giving to states for GST compensation

The Reserve bank of India may prefer center borrowing from the market and giving to states for GST compensation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X