இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த ஆன்லைன் கேமிங் துறைக்கு அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இருந்தாலும், இதன் மூலம் அதிகப்படியான மக்கள் குறிப்பாகப் பணத்தை வைத்து பெட்டிங் செய்து விளையாடும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால் தமிழ்நாடு அரசு இதைத் தடை செய்தது.
இந்த நிலையில் மத்திய அரசு இத்துறையை ஒழுங்குமுறை செய்து அதிகப்படியான வரி விதிப்பை விதிக்க முடிவு செய்தது, இதுவரையில் 18 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்ட நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் 28 சதவீத வரி விதித்தது. இதுமட்டும் அல்லாமல் வரி விதிக்கப்படும் முறையில் இருந்தும் முக்கியமான மாற்றத்தை அறிவித்தது.

இந்த நிலையில் புதிய வரி கணக்கீடு முறையின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட போது, ஆன்லைன் மணி கேமிங் நிறுவனங்கள் தற்போது games of skill கீழ் வகைப்படுத்தப்படும் வேளையில், 45000 கோடி ரூபாயை வரியாக அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் கேமிங் நிறுவனங்கள் தங்களுடைய மொத்த வருவாயில் 18 சதவீத வரியை செலுத்தி வரும் வேளையில், தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பின்பு சுமார் 45000 கோடி ரூபாய் அளவிலான வரி நிலுவையை வைத்துள்ளது என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) கணக்கிட்டு உள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி பிரிவின் DGGI அமைப்பும் வரி நிலுவை கொண்ட கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து கேமிங் துறை மட்டுமே சுமார் 45000 கோடி ரூபாய் வரி அரசுக்கு செலுத்தியுள்ளது, மேலும் கேமிங் துறையில் சுமார் 77 சதவீத பங்கீட்டை கொண்ட real money gaming அதாவது உண்மையான பணத்தை வைத்து விளையாடும் கேமிங் நிறுவனங்கள் கொண்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் 2017 முதல் 5000 கோடி ரூபாய்க்கும் குறைவான வரியை மட்டுமே செலுத்தியுள்ளது.
ஆனால் உண்மையாகச் செலுத்தியிருக்க வேண்டிய தொகை 50000 கோடி ரூபாய், இதுவரையில் 50000 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியிருக்கும் வேளையில் மீதமுள்ள 45000 கோடி ரூபாயை வசூலிக்க நோட்டீஸ் அனுப்ப தயாராகியுள்ளது DGGI. இதில் 12000 கோடி ரூபாய் வரி வெளிநாட்டு கேமிங் நிறுவனங்கள் செய்த வரி ஏய்ப்பு, 21000 கோடி ரூபாய் Gameskraft உடனான வரி நிலுவை.
தற்போது ஆன்லைன் கேமிங் துறையில் games of skill பிரிவுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் வேளையில், games of chance-க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி தான் எனக் குழப்பம் இருக்கிறது. இதுகுறித்த விளக்கம் விரைவில் அரசு தரப்பில் இருந்து வெளியாகும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முக்கியமான கேமிங் துறை மாற்றங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications