மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வர தயாராகி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது. குறிப்பாக நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் விலையில் பெரிய அளவிலான மாற்றத்தை காணப் போகிறோம். இது நம் மாதாந்திர பட்ஜெட்டிலேயே கணிசமான தொகையை சேமிக்க உதவும்.
இருந்தாலும் இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் சில பொருட்களின் விலையை உயர்த்தப் போகிறது. அவை என்னென்ன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு 5% மற்றும் 18% மட்டுமில்லாமல் 40% என மூன்றாவதாக ஒரு ஜிஎஸ்டி வரி விகிதத்தையும் பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி sin goods எனப்படும் பாவப் பொருட்களாக கருதப்படும் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என அரசு கூறுகிறது.

40% வரி விகிதம்: உடல் நலனுக்கு கேடு விளைவிக்க கூடிய பொருட்கள் மற்றும் ஆடம்பரமான பொருட்களுக்கு இந்த 40 சதவீத வரியை விதிக்கலாம் என்பதே அரசின் பரிந்துரை. இதன் மூலம் மக்கள் இந்த பொருட்களின் விலை உயர்வதால் உடலுக்கு கேடு தரக்கூடிய பொருட்களை வாங்குவது குறையும் , ஆடம்பர பொருட்களை வாங்கக்கூடிய நபர்கள் அதிக வரியை செலுத்தி வாங்கினால் அரசுக்கு அதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் இந்த 40% வரி என்பது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.எனவே தற்போது 28% கீழ் இருக்கக்கூடிய சில குறிப்பிட்ட பொருட்கள் 40% கீழ் வர இருக்கின்றன. இதன் மூலம் அவற்றின் விலையும் பெருமளவில் உயர இருக்கிறது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
புகையிலை பொருட்கள்: புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்துமே நம்முடைய உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியது . இவை அரசு கூறக்கூடிய பாவப் பொருள்களின் பட்டியலில் வருகின்றன. எனவே சிகரெட், சிகார், குட்கா, பான் மசாலா மற்றும் சில நிக்கோட்டின் கலந்த பொருட்கள் 40 சதவீத ஜிஎஸ்டி வரியின் கீழ் வருகிறது என்பதால் அவற்றின் விலையில் நாம் பல மடங்கு உயர்வை காண முடியும் .
சர்க்கரை கலந்த பானங்கள்: சர்க்கரை கலந்த இனிப்பு பானங்களை அதிகம் உட்கொள்வது நம் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. மக்களிடம் இதன் நுகர்வை குறைக்கும் வகையில் சர்க்கரை கலந்த Carbonated drinks, energy drinks, caffeinated beverages ஆகியவை தற்போதுள்ள 28 % ஜிஎஸ்டி வரியில் இருது 40% வரியின் கீழ் கொண்டு வரப்படும். எனவே இவற்றின் விலை உயருன்.
சூதாட்டம் மற்றும் பந்தயம்: லாட்டரி டிக்கெட் ,கேசினோ விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு 40% வரி பரிந்துரை ஏற்கப்பட்டால் அதற்காக கூடுதலாக செலவிட வேண்டி இருக்கும்.
ஆடம்பர கார்கள்: 1500 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட கார்கள் நான்கு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட வாகனங்கள் தற்போது 28% வரிவிதிப்பின் கீழ் இருக்கின்றன இவை நாற்பது சதவீத வரி விதிப்பின் கீழ் வர உள்ளன. எனவே ஆடம்பர கார்கள் விலை உயர போகிறது.
பிரீமியம் பைக்குகள்: 350 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட பிரீமியம் பைக்குகளான ராயல் என்ஃபீல்ட், ஹார்லி டேவிட்சன், அப்ரிலியா, கேடிஎம் பைக்குகள் 40% வரி விதிப்பின் கீழ் வரும் என்பதால் அவற்றின் விலை உயரும்.
துரித உணவுகள்: சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் junk foods ஆகியவையும் 40% ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர அரசு திட்டமிட்டு இருக்கிறது. எனவே இவற்றின் விலையும் இனி உயரப் போகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications