சென்னை: மத்திய அரசு இந்தியாவில் பெரிய அளவிலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு தயாராகி வருகிறது. இதற்கான பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அடுத்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடி இந்த வரி சீர்திருத்தம் தொடர்பான முக்கிய ஆலோசனையை நடத்த இருக்கிறது .
ஜிஎஸ்டி வரி: மத்திய அரசினை பொறுத்தவரை மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான பொருட்களை 5 சதவீதம் அல்லது 0 என்ற ஜிஎஸ்டி விகிதத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும். அதேபோல தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என்ற ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்படுகின்றன.

கார், பைக் விலை: எனவே நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பேஸ்ட்டில் தொடங்கி கார், பைக் என அனைத்து பொருட்களும் 0, 5, 18 ஆகிய மூன்று விகிதங்களில் ஏதேனும் ஒன்றுக்குள் வந்துவிடும். ஜிஎஸ்டி வரி குறைந்தால் இந்த பொருட்களின் விலையும் குறையும். எனவே மக்களிடையே நுகர்வு போக்கு அதிகரிக்கும் என மத்திய அரசு கணக்கிடுகிறது. இதனை அடிப்படையாக வைத்து தான் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருக்கிறது என தன்னுடைய சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
தீபாவளி வரை காத்திருக்கவும்: ஜிஎஸ்டி வரி குறைந்தால் பொருட்களின் விலை குறையும் என்பதற்காக மக்கள் தங்களுடைய ஷாப்பிங் பிளான்களையே தள்ளி வைத்திருக்கிறார்கள் . ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு மிகப்பெரிய அளவில் பணத்தை சேமிக்க உதவும். இந்தியாவை பொருத்தவரை கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே வாகனங்களின் விற்பனையில் சரிவை காண முடிகிறது.
விற்பனை மந்தம்: குறிப்பாக கார்களின் விற்பனை மந்தத்திலேயே இருக்கிறது. இதனால் கார் உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் கார் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 6 சதவீதமாகவும் கார்களின் விற்பனை 1 சதவீதமாகவும் குறைந்து இருக்கிறது.
கார், பைக் ஜிஎஸ்டி வரி: இந்த நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படக்கூடிய 28 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் மூலம் 18 சதவீதமாக குறைவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 இலிருந்து 18 சதவீதமாக குறைந்தால் அவற்றின் விலை 10% வரை குறையும்.
கார் விலை: சர்வதேச தரகு நிறுவனமான ஜெஃப்ரீஸ் ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பட்சத்தில் இந்தியாவில் கார்கள் குறிப்பாக சிறிய ரக காரர்கள் மற்றும் இருச்சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு விலை குறையும்போது நீங்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு காரை வாங்குகிறார்கள் என்றால் அதன் ஜிஎஸ்டி 28 இல் இருந்து 18 சதவீதமாக குறையும். அதாவது விலையிலும் 10 சதவீதம் குறையும் எனவே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரில் உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் .
பைக் விலை :1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம் வாங்குவோருக்கும் 10,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். நீங்கள் கார் மற்றும் பைக் வாங்கக்கூடிய திட்டத்தில் இருந்தால் இன்னும் ஒரு மாதத்திற்கு அந்தத் திட்டத்தை தள்ளிப் போட்டால் உங்களுக்கு ஒரு கணிசமான தொகை சேமிக்க முடியும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications