தங்கத்தை விற்று தள்ளும் குஜராத் மக்கள்..!! 6 மாசத்துலயே இத்தனை கோடியா?

பொதுவாக ஒரு பொருள் விலை குறையும் போது வாங்க வேண்டும், விலை கூடும் போது விற்க வேண்டும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் தங்கம் மட்டும் மக்கள் விலை உயர்ந்தாலும் வாங்குவார்களே தவிர அத்தனை சீக்கிரம் விற்க மாட்டார்கள். இதில் குஜராத் மக்கள் சற்றே மாறுபட்டுள்ளனர்.

குஜராத் மக்கள் நடப்பு 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், சுமார் 3,804 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விற்று பணமாக்கியுள்ளனர். கடந்த ஜனவரி 29ஆம் தேதி, இந்தியாவில் தங்கம் விலை வரலாற்று உச்சம் தொட்டது. அகமதாபாத் சந்தையில் தங்கம் விலை 10 கிராமுக்கு 1.79 லட்சம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரன் 1.33 லட்சமாக உயர்ந்தது.

தங்கத்தை விற்று தள்ளும் குஜராத் மக்கள்..!! 6 மாசத்துலயே இத்தனை கோடியா?

இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக பலரும் தங்கத்தை விற்று லாபம் பார்த்துள்ளனர். உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியா முழுவதும் சுமார் 50.4 மெட்ரிக் டன் பழைய தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 76,087 கோடி ரூபாய். இதில் குஜராத்தின் பங்கு மட்டும் சுமார் 5 சதவீதம் ஆகும். மற்ற மாநிலங்களை விட இது அதிகம் என சொல்லப்படுகிறது.

Also Read

வழக்கமாக குஜராத் மக்கள் தங்கத்தை உடனடி பண தேவைக்கான ஒன்றாக பார்க்காமல், நீண்ட கால முதலீடாகவே கருதுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்த டிரெண்ட் மாறி இருக்கிறது. பழைய தங்கத்தை விற்று பணமாக்குவது மட்டுமில்லாமல் பலர் தங்கள் பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்கு முன்னுரிமை தந்துள்ளனர் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு பின் தங்கம் விலை குறைந்தது. ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம். தற்போது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு சுமார் 28,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை மாற்றாமல் விட்டதால் வரும் நாட்களில் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Recommended For You

அதே வேளையில் இந்தியாவில் இனி பண்டிகை காலம். ரக்ஷா பந்தன் , விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகள் வரிசை கட்டுகின்றன. தற்போது தங்கம் விலையும் குறைந்திருப்பதால் இந்தியாவில் இனி வரும் மாதங்கள் நகை விற்பனை மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

22 கேரட் தங்கம் ஒரு பவுன் 1 லட்சம் ரூபாய்க்கு மேலேயே இருப்பதால் இந்த முறை பண்டிகை சீசனில் குறைந்த எடை கொண்ட மற்றும் 18, 14 கேரட் தங்க நகைகள் விற்பனைக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+