வங்கி,நிதி,வாகனம் மற்றும் சுகாதாரம் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வரும் இந்துஜா குழுமத்தின் ஒரு துணை நிறுவனம்தான் கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா லிமிடெட். இந்நிறுவனம் மோட்டார் வாகனம் மற்றும் வாகனம் அல்லாத என்ஜின்களுக்கான மசகு எண்ணெய் (Lubricants) உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் முன்னணி 3 தனியார் லூப்ரிகண்ட் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும். பங்குதாரர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்து வரும் நிறுவனங்களில் கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா நிறுவனமும் ஒன்று.
2014ம் ஆண்டு முதல் கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது. அப்போது, இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 இடைக்கால டிவிடெண்ட் வழங்கியது. அது முதல் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு தவறாமல் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. இதனால் டிவிடெண்ட் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பங்குக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிறுவனம் தற்போதும் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்கு ஒன்றுக்கு ரூ.20 (1,000 சதவீதம்) இடைக்கால டிவிடெண்ட் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த இடைக்கால டிவிடெண்டுக்கான பங்குதாரர்களின் உரிமையை நிர்ணயிப்பதற்கான பதிவு தேதியை 2025 பிப்ரவரி 14ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரையிலான காலத்தில் அதிகபட்சமாக 2023ம் ஆண்டில் ஈக்விட்டி பங்கு ஒன்றுக்கு ரூ.25 டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வியாழக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில்,கல்ஃப் ஆயில் லூப்ரிகண்ட்ஸ் இந்தியா லிமிடெட் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும்0.84 சதவீதம் உயர்ந்து ரூ.1,077.50ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 150.61 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த 3 மாதத்தில் இப்பங்கின் விலை 14.68 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இந்தாண்டில் இதுவரை இப்பங்கின் விலை 10.36 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications