ஹெச்1பி விசாவில் Infosys-க்கு அடித்த ஜாக்பாட்..! அப்போ டிரம்ப் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாரா..?

டிரம்ப் தலைமையிலான அரசு விசா மற்றும் கிரீன் கார்டு வழங்குவதில் அதிகப்படியான தடைகளை விதித்து வரும் வேளையில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

அமெரிக்க அரசு, அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் பொருட்டு வெளிநாட்டவர்களுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும் விதிமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. உதாரணமாக ஹெச்1பி விசா வழங்குவதில் முன்பு லாட்டரி அடிப்படையில் வழங்கப்பட்டது, தற்போது சம்பள கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

 ஹெச்1பி விசாவில் Infosys-க்கு அடித்த ஜாக்பாட்..! அப்போ டிரம்ப் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாரா..?

இதேபோல் கல்வி அடிப்படையிலான கட்டுப்பாடு, புதுப்பிக்கும் போது அதிகப்படியான ரிஜெக்க்ஷன், கிரீன் கார்டு வழங்குவதில் PERM திட்டத்தின் கீழ் பெறுவதற்கு பல்வேறு பல முக்கிய நிறுவனங்களுக்குத் தற்காலிக தடை என பல்வேறு நெருக்கடியை டிரம்ப் அரசு விதித்து வருகிறது.

இதனால் கடந்த 1-2 வருடங்களாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பணிக்காகச் செல்வோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. விசா விண்ணப்பங்களும் குறைந்துள்ளது.

Also Read

இந்த நிலையில் 2026ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பத்தில் இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 8 மடங்கு அதிக ஒப்புதல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு செய்யப்பட்டு விண்ணப்பங்களில் வெறும் 257க்கு மட்டுமே ஒப்புதல் கிடைத்தது, இந்த ஆண்டு 2088 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என தி டலாஸ் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

டெஸ்சாஸ் நிறுவனத்தில் இருக்கும் டெக் நிறுவனங்களில் அதிகப்படியான ஹெச்1பி விசா அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் திகழ்கிறது.

இன்போசிஸ் டெக்சாஸ் Richardson-ல் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தாலும், 2088 பேர் அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்போசிஸ் மட்டும் அல்லாமல் KPMG நிறுவனம் கடந்த ஆண்டு 75 விசாக்களை மட்டுமே பெற்ற நிலையில், இந்த ஆண்டு 234 விசாக்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் 125 விசாக்களும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 69 விசாக்களும், UT Southwestern Medical Center 102 விசாக்களும், Dallas Independent School District 73 விசாக்களையும் பெற்றுள்ளது.

இதேவேளையில் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் டிரம்ப் அரசுக்கான அதிகாரம் குறைந்திருக்கும் வேளையில், டெஸ்சாஸ்-ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கவர்னர் Gina Hinojosa டிரம்ப் அரசு கொண்டு வந்த விசா மற்றும் கிரீன் கார்டு கட்டுப்பாடுகளை நீக்க திட்டம் உள்ளதாக அறிவித்துள்ளார், இதில் முக்கியமாக முன்னாள் டெக்சாஸ் கவர்னர் Greg Abbott கொண்டு வந்த சட்டமும் அடக்கம்.

டெக்சாஸ் மாநில அரசு விசா விண்ணப்பம் செய்வதில் தனிப்பட்ட கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதாவது Greg Abbott 2026 ஜனவரி மாதம் கொண்டு வந்த சட்டத்தின் படி, டெக்சாஸ் மாநிலத்தில் இருக்கும் நிறுவனங்கள் விசா விண்ணப்பம் செய்யும் முன்பு Texas Workforce Commission-யிடம் ஒப்புதல் பெற்ற பின்பு தான் சமர்ப்பிக்க வேண்டும் என கட்டுப்பாடு இருந்தது. இதை நீக்குவதாகவும் Gina Hinojosa உத்தரவாதம் கொடுத்துள்ளார். இதோடு டெக்சாஸ்-ல் இந்திய வம்சாவளியினர் அதிகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+