ICICI பேங்க், HDFC பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து ஃபிஷிங் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக முன்னணி வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இந்த தாக்குதல்கள் அதிகளவில் நடப்பதாக அரேசென்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு நாட்டில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களுக்கு எதிராக வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.
Zscaler Threat Labz-இன் அறிக்கையில், இந்தியப் பயனர்களை குறிவைத்து அதிக அளவில் பிஷிங் தாக்குதல்கள் நடக்கிறது. இதில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் முக்கிய உத்தி என்னவென்றால் வங்கி இணையதளங்களைப் போலவே போலி இணையதளங்கள் மற்றும் ஈமெயிலை பயன்படுத்தி மோசடி செய்வதாகும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பயனர்களின் லாகின் விவரங்கள் மற்றும் அக்கவுண்ட் விவரங்களை எடுத்து, அதன் பிறகு அவற்றையே பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

ICICI பேங்க், HDFC பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் போன்ற வங்கிகள் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இதுபோன்ற பிஷிங் தாக்குதல்களை நடத்துகின்றனர். இதன் மூலம் பெரிய அளவிலான தொகையையும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை மூலம் அபகரிக்கின்றனர்.
உங்கள் வங்கி கணக்கை பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?:
சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடிய எந்த இணைப்புகளிலும் ஒருபோதும் உங்கள் தனிப்பட்ட வங்கி விவரங்களைப் பயன்படுத்த வேண்டாம். SMS-இல் வரும் செய்திகளைப் பாதுகாப்பாக கையாள வேண்டும். வலைத்தளம் மூலம் செய்யப்படும் பண பரிவர்தனைகளுக்கு முன், நீங்கள் பயன்படுத்தும் இணையதள முகவரி சரியானதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சந்தேகம் அளிக்கக்கூடிய இணையதளங்களை பயன்படுத்த வேண்டாம். அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களின் URL பார்க்கும் போதே தெரிந்து விடும். எனவே அவற்றை மட்டும் பயன்படுத்துங்கள். ஒரு வேலை பார்ப்பதற்கே சந்தேகம் அளிக்கும்படி இருந்தால் பேங்கிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.
மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் மற்றொரு முக்கிய யுக்தி அவசர நிலையை ஏற்படுத்துவதாகும். உதாரணமாக கொரியர் வந்துள்ளதாகவும், அவற்றுள் போதைப்பொருள் இருப்பதாகவும் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி, பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க பணம் அனுப்புமாறு கூறுகின்றனர். இதை நம்பும் மக்களும் ஏமாந்து பணத்தை அனுப்புகின்றனர். அதேபோல பிறரின் உணர்வுகளோடு விளையாடி நம்ப வைத்து ஆசைவார்த்தை கூறி பணம் பறிக்கும் செயல்களும் நடந்து வருகிறது.
பொது இடங்களில் வழங்கப்படும் இலவச வைஃபையில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பான நெட்வொர்க்குகளை பயன்படுத்தவும். சில இடங்களில் பொது வைஃபை இலவசமாக வழங்கப்பட்டிருக்கும். இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இதுபோன்ற சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலே நிதி இழப்புகள் ஏற்படுவதை வெகுவாரியாக தவிர்க்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications