மெக்டொனால்டு-ஐ ஓடவிட்ட ஹல்திராம்ஸ்.. இந்தியர்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மீதான மோகம் குறைந்ததா..?

இந்திய உணவு சந்தையில் தற்போது பெரும் போட்டி உருவாகியுள்ளது, ஒருபக்கம் இந்திய மக்கள் மத்தியில் மாறி வரும் உணவு விருப்பம், மறுபக்கம் பணவீக்கம் காரணமாக உணவுகள் விலை உயர்வு ஏற்பட்டு லாபம் குறைந்து வருகிறது. இவ்விரண்டுக்கும் மத்தியில் முன்னணி உணவகங்கள் முதல் தள்ளுவண்டிக் கடை முதல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இணையத்தில் பர்கர் Vs சமோசா என்ற விவாதம் உருவாகியுள்ளது. அதாவது உலக புகழ்பெற்ற பர்கர் தயாரிப்பிலும், விற்பனையிலும் கொடிகட்டிப் பறக்கும் மெக்டொனால்டு நிறுவனமும், தோசை, பூரி, தோக்லா, வடா பாவ் போன்ற இந்திய உணவுகளுக்குப் பெயர்போன ஹல்திராம்ஸ்-க்கும் ஒப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

மெக்டொனால்டு-ஐ ஓடவிட்ட ஹல்திராம்ஸ்.. இந்தியர்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மீதான மோகம் குறைந்ததா..?

பர்கர் Vs சமோசா

ஹல்திராம்ஸ் ஒரு ஸ்னாக்ஸ் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் 2025ல் அதன் டெல்லி மற்றும் நாக்பூர் வர்த்தகத்தை இணைக்கப்பட்டத்தில் இருந்து நாட்டின் முன்னணி ஸ்னாக்ஸ் + ஹோட்டல் பிராண்டாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதேவேளையில் மெக்டொனால்டு முழுக்க முழுக்க QSR பிரிவைச் சார்ந்த ஒரு உணவக நிறுவனமாகும். இவ்விரு நிறுவனங்களின் வருவாய், லாபம், கடைகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போதும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது தெரிய வந்துள்ளது.

மெக்டொனால்டு-ஐ ஓடவிட்ட ஹல்திராம்ஸ்.. இந்தியர்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மீதான மோகம் குறைந்ததா..?

ஹல்திராம்ஸ்

ஹல்திராம்ஸ் இந்தியா முழுவதும் 400க்கும் அதிகமான கிளை கொண்டு வருடத்திற்கு 13000 - 14000 கோடி ரூபாய் வரையிலான வருடாந்திர வருமானத்தைப் பெற்று வருகிறது. மேலும் ஹல்திராம்ஸ் வருடத்திற்கு 1200 - 1400 கோடி ரூபாய் வரையிலான லாபத்தைப் பதிவு செய்து வருகிறது.இதன் மூலம் ஒரு கடைக்குச் சராசரியாக 3.5 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று வருகிறது.

மெக்டொனால்டு-ஐ ஓடவிட்ட ஹல்திராம்ஸ்.. இந்தியர்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மீதான மோகம் குறைந்ததா..?

மெக்டொனால்டு

மெக்டொனால்டு இந்தியாவில் 2 பிரான்சைஸ் நிறுவனங்கள் வாயிலாக இயங்கி வருகிறது, வெஸ்ட்லைப் புட்வோல்டு மற்றும் கானாட் பிளாசா ஆகியவற்றின் கீழ் பிராந்திய அடிப்படையில் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் மெக்டொனால்டு 600க்கும் அதிகமான கிளைகள் கொண்டு இயங்கி வரும் வேளையில் வருடத்திற்கு 5500 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தையும், 200 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்று வருகிறது. இதன் மூலம் ஒரு கடைக்குச் சராசரியாக 4 லட்சம் ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்று வருகிறது.

லாபம் விளிம்பு

ஹல்திராம்ஸ் அதிகப்படியான வருமானத்தைப் பெறுவதற்கு முக்கியமான காரணம் அதன் ஸ்னாக்ஸ் வர்த்தகம், (ஹோட்டல் பிரிவு வர்த்தகத்தின் லாபம், வருமான தரவுகள் வெளியிடப்படவில்லை) இதனால் இந்நிறுவனத்தின் லாப மார்ஜின் கிட்டதட்ட 10 சதவீதம் அளவுக்கு உள்ளது, ஆனால் மெக்டொனால்டு 4 சதவீத அளவில் உள்ளது.

மெக்டொனால்டு-ஐ ஓடவிட்ட ஹல்திராம்ஸ்.. இந்தியர்களுக்கு வெளிநாட்டு உணவுகள் மீதான மோகம் குறைந்ததா..?

மக்கள் மத்தியில் மாற்றம்

முன்பு இந்திய மக்கள் மத்தியில் வெளிநாட்டு உணவுகள் மீது அதிகப்படியான ஆர்வம் இருந்தது, இதனாலேயே பிட்சா, பர்கர் கடைகள் எண்ணிக்கை வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது, மக்களுக்கு வெளிநாட்டு உணவு மீதான ஆர்வம் குறைந்து வருகிறது, இதேவேளையில் பர்கர், பீட்சாவுக்கு போட்டியாகப் பல இந்திய நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் பீட்சா ஹட், மெக்டொனால்டு போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தை இழந்து வருகிறது.

இதைத் தாண்டி பீட்சா ஹட், மெக்டொனால்டு பக்கம் மக்கள் போகாமல் இருக்க முக்கியமான காரணம் அதன் விலை, மற்ற கடைகள், பிரண்டுகளை ஒப்பிடுகையில் விலை அதிகமாக இருப்பதால் மக்களின் தேர்வு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 12 மாத சோமேட்டோ தளத்தில் இந்திய மக்களின் உணவு தேர்வு முறைகளைப் பார்க்கும் போது, பீட்சா - பர்கர்-க்கான டிமாண்ட் தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளது. இதேவேளையில் பிரியாணி, தோசை போன்ற இந்திய உணவுகளுக்கு மக்கள் மத்தியில் அதிக விருப்பம் உள்ளது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+