தங்கம் விலை ஆனது பிப்ரவரி 28 மாதத்தின் இறுதி நாளான இன்று மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே விலை ஏற்றத்தை சந்தித்து வந்த தங்கம் கடந்த 3 நாட்களாக சரிவில் உள்ளது. அதைவிட இன்று சூப்பர் சரிவில் உள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு சிறப்பான மகிழ்ச்சியை அளித்துள்ளது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோருக்கும் இன்ப செய்தி கிடைத்துள்ளது. இன்றைய ஒரு கிராம் 22 காரட் தங்கம் 50 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல், 24 காரட் தங்கம் ரூ.55 குறைந்துள்ளது.
நேற்றைய (27/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,010-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,010-க்கும் விற்பனையானது.

அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,738-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 69,904-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,380-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,550-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,720-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,900-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய (22/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.50 குறைந்து ரூ. 7,960க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.400 குறைந்து ரூ. 63,680 க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,600-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.55 குறைந்து ரூ. 8,683-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.69,464-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,830-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 18 கேரட் ரூ.40 குறைந்து ரூ.6,550-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.320 குறைந்து ரூ. 52,400-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.400 குறைந்து ரூ. 65,900-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையை பொறுத்தவரையில், இன்று குறைந்துள்ளது. நேற்று ரூ.106 விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 1 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.105-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.1,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications