தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் 100 கிராமுக்கு சுமார் 33,000 ரூபாய்க்கு மேல் விலை பியூச்சர் சந்தையில் குறைந்துள்ள செய்தி, நகை வாங்குவோருக்கு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் குழப்பமான சூழலால் ஏற்பட்ட இந்தச் சரிவு, இது தங்கம் வாங்க சரியான நேரமா? அல்லது இன்னும் விலை குறையுமா? என்ற கேள்வியை ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழுப்பியுள்ளது. இந்த விலை இறக்கத்தின் பின்னணியில் உள்ள நுணுக்கங்கள் என்னென்ன? இன்னும் குறையுமா? அல்லது வாங்கலாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாகவே சரிந்து வரும் தங்கம் விலையானது பல்வேறு கேள்விகளை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. குறிப்பாக புவிசார் அரசியல் பதற்றம் மத்தியில், தங்கம் பெரிய அளவில் விலை ஏறவில்லையே. அப்படி எனில் தற்போது சரிந்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்பது பெரிய குழப்பமாகவே இருக்கிறது.

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவை டாலர் அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுவதால், டாலர் வலுவடையும் போது, மற்ற நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்த உலோகங்களை வாங்குவது அதிக செலவு பிடிக்கும் காரணியாகிறது. இதனால் தேவை குறைந்து விலை சரிந்துள்ளது. இதனிடையே தான் டாலரில் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. இதுவே இந்த விலை அழுத்தத்திற்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மங்கிவிட்டது. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, வட்டியில்லாத தங்கத்தில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் தவிர்க்க முற்படுகின்றனர். ஆக இதுவும் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்க முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

மேலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சமீபத்தில் உச்சத்தில் இருந்ததால், பல முதலீட்டாளர்கள் லாபத்தை புக் செய்வதற்காக தங்கள் முதலீடுகளை விற்று விட்டு வெளியேறி வருகின்றனர். இது சந்தையில் விற்பனையை அதிகப்படுத்தி விலையை கீழே தள்ளியுள்ளது.

பொதுவாக போர் போன்ற நிச்சயமற்ற பதற்றமான சூழல்களில் தங்கம் விலை உயரும். ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட பணமாக கையில் வைத்திருக்க அல்லது மற்ற சொத்துக்களில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.

Also Read

ஆக இப்படியான காரணிகளுக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது. இந்த போக்கு குறுகிய காலத்திற்கு தொடரும் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் காரணிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். குறிப்பாக அமெரிக்கா ஈரானை தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலில், அது மேற்கொண்டு தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+