இந்திய ஐடி துறையும், அதன் வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது வர்த்தகப் பிரிவையும், சேவைகளையும் விரிவாக்கம் செய்தும் மேம்படுத்தியும் வருகிறது.
உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் தற்போது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ள வேளையிலும், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பத்தின் கீழ் அதிகளவிலான வர்த்தகம் கிடைத்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஹெச்சிஎல். ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இந்தியாவில் டாப் 4 ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அமேசான் வெப் சர்வீசஸ் வர்த்தகப் பரிவில் மட்டும் சுமார் 10,000 ஊழியர்களைப் புதியாகச் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இப்பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது மட்டும் அல்லாமல் பிற நிறுவனங்கள் உடன் போட்டிப்போட முடியும்.
டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன்
உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்குப் பின்பு தங்களது வர்த்தக்தை டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மாற்றத்தின் மூலம் ஊழியர்களை எண்ணிக்கையைக் குறைப்பது மட்டும் அல்லாமல் ரியல் டைம் நிர்வாகத்தை மேம்படுத்த முடியும். இதனாலேயே தற்போது அதிகளவிலான வர்த்தகம் இப்பிரிவில் உருவாகி வருகிறது.
டிசிஎஸ், இன்போசிஸ்
இந்த வர்த்தக வாய்ப்பை டிசிஎஸ், இன்போசிஸ் போன்றவை பெரிய அளவில் கைப்பற்றி வரும் நிலையில் ஹெச்சிஎல் நிறுவனமும் இப்பரிவில் போட்டிப்போட தற்போது களத்தில் இறங்கியுள்ளது. டிசிஎஸ் ஏற்கனவே கிளவுட் சேவைக்காகத் தனிப்பிரிவை உருவாக்கி, அதன் கீழ் தொழில்நுட்ப ரீதியாகத் துணை பிரிவுகளைப் பிரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10,000 ஊழியர்கள்
இதற்கிடையில் ஹெச்சிஎல் தற்போது அமேசான் வெப் சர்வீசஸ் வர்த்தகப் பிரிவை தனியாகப் பிரித்தது மட்டும் அல்லாமல் இன்ஜினியரிங், சொல்யூஷன்ஸ், பிஸ்னஸ் எனப் பல சேவைகளை உட்கொண்டு உள்ளது. முதற்கட்டமாக இப்பரிவில் 10,000 ஊழியர்களையும், வரும் காலத்தில் 20,000 நிபுணர்களையும் இப்பிரிவில் சேர்க்க உள்ளதாக ஹெச்சிஎல் தெரிவித்துள்ளது.
அமேசான் வெப் சர்வீசஸ்
தற்போது உலக நாடுகளில் லீகசி சிஸ்டம்ஸ், மெயின்பிரேம் அப்ளிகேஷன்ஸ் அனைத்தும் கிளவுட் சேவைக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதேபோல் SAP தளத்தில் இருக்கும் சேவைகளையும் அமேசான் வெப் சர்வீசஸ் தளத்திற்கு மைகிரேட் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் அமேசான் வெப் சர்வீசஸ் சார்ந்து அதிகளவிலான வர்த்தகம் உருவாகி வருகிறது.
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்
இதனால் இந்தியாவில் அமேசான் வெப் சர்வீசஸ் பிரிவில் அனுபவம் வாய்ந்த ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது. அனைத்து நிறுவனங்களிலும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் அதிகப்படியான சம்பள உயர்வுடன் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications