உலகின் டாப் 10 கோடீஸ்வர்களில் ஒருவர், இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என பல பெயர்கள் வந்தாலும், கொடையில் தமிழரை ஆடித்தக்க ஆள் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் ஹெ.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார்.
இந்தியாவின் 3-ம் பெரிய கோடீஸ்வரரான ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார், ஆண்டுக்கு 1,161 கோடி ரூபாய் நன்கொடை செய்துள்ளதாக EdelGive Hurun இந்தியா பரோபகாரப் பட்டியல் 2022 மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த பட்டியலில் உள்ள பிறர் யார் யார்? எவ்வளவு நன்கொடை அளித்துள்ளார்கள். எதற்காக நன்கொடை அளித்துள்ளார்கள் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.
ஷிவ் நாடார்
ஷிவ் நடார் எஸ்எஸ்என் கல்வி நிறுவனங்கள், வித்யா கயான், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், பள்ளி, ஷிக்ஷா முயற்சி, மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் போன்றவற்றின் கீழ் கல்வி மற்றும் கலை பணிகளுக்காக 1161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
அசிம் பிரேம்ஜி
ஷிவ் நாடாரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 77 வயது கோடீஸ்வரரான விப்ரோவின் அசிம் பிரேம்ஜி 484 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறார். அதில் பெரும் பகுதி கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரும், இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய கோடீசுவரருமான முகேஷ் அம்பானி ஆண்டுக்கு 411 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறார். அதில் பெரும் பகுதி கல்வி பணிககாக செலவிடப்படுகிறது.
பிர்லா குடும்பம்
பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவும் அவரது குடும்பமும் ஆண்டுக்கு 342 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
கவுதம் அதானி
உலகின் டாப் 10 கோடீஸ்வர்களில் ஒருவராக உள்ள கவுதம் அதானி ஆண்டுக்கு 190 கொடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறார்.
அனில் அகர்வால்
தூத்துக்குடி ஸ்ட்ரெலைட் அலையைச் சொந்தமாகக் கொண்ட வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் கொரோனா பணிகளுக்காக மட்டும் ஆண்டுக்கு 165 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications