இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு முக்கிய ஊந்து சக்தியாக இருக்கப்போவது, செமிகண்டக்டர் தான். இந்தியாவில் இத்துறை நிறுவனங்கள் இல்லாத நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட்டணியில் 2 மெகா திடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழரான என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா எலக்ட்ரானிக்ஸ் தைவான் நாட்டைச் சேர்ந்த PSMC நிறுவனத்துடன் இணைந்து 2 செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்கிறது. இதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குரூப்-ன் கட்டுப்பாட்டில் இருக்கும் CG Power and Industrial Solutions, தாய்லாந்து Renesas Electronics உடன் இணைந்து இந்தியாவில் osat தொழிற்சாலை அமைக்க உள்ளது.

இந்த 3 திட்டங்களுக்கும் மத்திய அரசு PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அடுத்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திட்டம் பாக்ஸ்கான் - ஹெச்சிஎல் மத்தியிலான கூட்டணி திட்டத்தின் முடிவு தான். ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனம் வேதாந்தா குழுமத்துடனான கூட்டணி திட்டத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் குழுமம் ஆகியவை இந்தியாவில் இணைந்து சிப் அசெம்பிளி யூனிட்டை அதாவது OSAT தொழிற்சாலையை நிறுவுவதற்கான திட்டத்தை மத்திய அரசிடம் சில வாரங்களுக்கு முன்பு சமர்ப்பித்தது. ஆனால் இத்திட்டம் மத்திய அரசுக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் இது குறித்து கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் இந்நிறுவனத்தை கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தயாரிக்கும் திட்டத்துடன் துவங்கினாலும் பின்னாளில் இது சாப்ட்வேர் நிறுவனமாக மாறியது. இந்த நிலையில் தந்தையின் கனவை நினைவாக்கும் பொருட்டு ரோஷினி நாடார் முன்பே பல முயற்சிகளை செய்த முழுமையான வெற்றியை சுவைக்க முடியாத நிலையில் தான் பாக்ஸ்கான் உடனான கூட்டணி உருவானது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் குழுமம் இணைந்து விண்ணப்பித்த திட்டத்தின் மதிப்பு மட்டும் 10 பில்லியன் டாலர், இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் PLI கீழ் இக்கூட்டணி தனது முதலீட்டுக்கு மானியங்களை பெற்ற முடியும். பாக்ஸ்கான் முயற்சிக்கு ஆரம்பத்தில் இருந்து மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது, இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு செமிகண்டக்டர் துறையில் PLI திட்டத்தின் கீழ் மானியம் பெற வேண்டுமெனில் இத்துறையில் அனுபவம் உள்ள நிறுவனங்கள் டெக்னாலஜி பார்ட்னராக கொண்டு வர வேண்டும் என்பது தான்.
உதாரணமாக டாடா குழுமத்திற்கு PSMC, முருகப்பா குரூப்-க்கு தாய்லாந்து Renesas Electronics போன்ற டெக் பார்ட்னர்கள். வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணியில் இந்த பிரச்சனைக்காக தான் ஒப்புதல் பெற முடியாமல் தோல்வியில் முடிந்தது.
ஹெச்சிஎல் மற்றும் பாக்ஸ்கான் குழுமம் இணைந்து விண்ணப்பித்த விண்ணப்பத்தின் படி அவுட்சோர்ஸ்டு அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் (OSAT) யூனிட் எந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும், இந்த கூட்டணியில் தொழில்நுட்ப பங்காளி யார், இரு பங்காளிகளுக்கும் இடையே தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் தன்மை போன்ற கூடுதல் தகவல்களை மத்திய அரசு கோருகிறது.
"இந்த இரண்டு நிறுவனங்களும் (ஹெச்.சி.எல் மற்றும் ஃபாக்ஸ்கான்) ஓர் தொழில்நுட்ப பங்காளியைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்கள் முன்மொழிந்த OSAT யூனிட்டின் உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு குறித்த விவரங்களையும் நாங்கள் கோரியுள்ளோம்" என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரியில், ஹெச்.சி.எல் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகியவை இந்தியாவில் ஒரு OSAT யூனிட்டை அமைப்பதற்காகக் கூட்டு முயற்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தன. அப்போது, இந்த யூனிட்டில் மொத்த முதலீடு 100 மில்லியன் முதல் 150 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்று கூறப்பட்டது, ஆனால் தற்போது விண்ணப்பத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications