இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகப்படியான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிய முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான HCL Technologies நிறுவனத்தின் நிறுவனரும், தமிழருமான ஷிவ் நாடார்-ன் பிறந்த நாள் இன்று.
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்முனைவோர், தொழிலதிபர் மற்றும் நன்கொடையாளராக விளங்கும் ஷிவ் நாடார், ஜூலை 14 ஆம் தேதி இன்று தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்தியாவின் சுயமாக தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அதன் மூலம் பில்லியனர் என அந்தஸ்தை பெற்றவர் ஷிவ் நாடார்.

இந்திய அரசு முக்கிய வர்த்தக முடிவுகள் எடுக்கப்பட்ட காலத்தில் ஷிவ் நாடார்-ன் தொலைநோக்கு பார்வை மற்றும் முக்கியமான முடிவுகளால் இந்தியாவில் முதல் பர்சனல் கம்பியூட்டரை உருவாக்கினார். வன்பொருள் விற்பனையில் முன்னோடியாக இருந்தது மட்டும் அல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்போது உலகின் முன்னணி நிறுவனமார உயர்ந்துள்ளது ஷிவ் நாடார் உருவாக்கிய HCL Technologies நிறுவனம்.
ஷிவ் நாடார் தான் உருவாக்கிய HCL Technologies நிறுவனத்தின் நிர்வாகத்தை தனது ஓரே மகளான ரேஷினி நாடார் கையில் கொடுத்துள்ள நிலையில் 78 வயதில் ரிட்டையர்மென்ட் வாழ்க்கை அனுபவித்து வருகிறார். ஷிவ் நாடார் தான் உருவாக்கிய Shiv Nadar Foundation வாயிலாக கல்வி மற்றும் ஊரக வளர்ச்சியில் அதிகப்படியான நன்கொடையும், உதவிகளையும் செய்து வருகிறார்.
ஷிவ் நாடார் கோயம்புத்தூரில் உள்ள PSG கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு, அவர் 1967 இல் புனேவில் உள்ள வால்சந்த் குழுமத்தின் கூப்பர் இன்ஜினியரிங்க் நிறுவனத்தில் தனது முதல் பணியை தொடங்கினார். அதன் பின்னர் டெல்லி கிளாத் மில்ஸ்-ன் டிஜிட்டல் பொருட்கள் பிரிவில் வேலைக்குச் சென்றார்.
1975 ஆம் ஆண்டில் தான் ஷிவ் நாடாரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. ஷிவ் நாடார் தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் சேர்ந்து 1975 ஆம் ஆண்டில் மைக்ரோகாம்ப் லிமிடெட் (MicroComp Limited) என்ற சொந்த நிறுவனத்தை துவங்கினார்.
இதுகிட்டதட்ட இன்றைய ஸ்டார்ட்அப் கட்டமைப்பில் 1970களில் ஷிவ் நாடார் MicroComp நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்தில் ஷிவ் நாடார் உட்பட 8 பங்குதாரர்கள் இருந்த நிலையில் இதில் மிகப்பெரிய பங்குதாரராக ஷிவ் நாடார் இருந்தது குரிப்பிடத்தக்கது.

மைக்ரோகாம்ப் நிறுவனம் ஆரம்பத்தில் டெலி-டிஜிட்டல் கால்குலேட்டர்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தியது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் அதாவது 1976 ஆம் ஆண்டில், மத்திய அரசின் கொள்கை மாற்றத்தின் காரணமாக ஐபிஎம் நாட்டை விட்டு வெளியேறியதில் ஷிவ் நாடார் இந்தியாவின் கணினி சந்தையில் ஒரு வாய்ப்பைக் கண்டார்.
இதை தொடர்ந்து 1976ல் ஷிவ் நாடார் சுமார் 18,700 ரூபாய் முதலீட்டில் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் ஷிவ் நாடார். இவருக்கு கைகொடுக்கும் வரையில் உத்தர பிரதேசம் முக்கிய கூட்டணியை உருவாக்கியது.
ஷிவ் நாடார் ஐடியா திட்டம் ஆகியவற்றை பிரித்து போக HCL நிறுவனத்தில் 26 சதவீத பங்குகளுக்கு உத்தரப்பிரதேச அரசு ரூ.20 லட்சம் கூடுதல் மானியத்தை கொடுத்து முதல் முதல் பொது-தனியார் கூட்டாண்மையாக (PPP) உருவாக்கியது.
இதன் கூட்டணி மூலம் HCL 1978 இல் இந்தியாவில் HCL 8C எனப்படும் முதல் கணினியை அறிமுகப்படுத்தியது. மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றம் இருப்பதை உணர்ந்த ஷிவ் நாடார், IT சேவைகளை வழங்குவதற்காக சிங்கப்பூருக்கு சர்வதேச அளவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார்.
இதன் பின்பு ஹெச்சிஎல் நிறுவனத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தற்போது இந்தியாவின் 3வது ஐடி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் சந்தையில் சுமார் 3.07 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்புடன் அசத்துகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications