ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 79% அதிகரிப்பு..!

இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, தன் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. ஹெச் டி எஃப் சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தன்னுடைய செப்டம்பர் 2019 காலாண்டில், நிகர லாபம் 79 சதவிகிதம் அதிகரித்து 368.3 கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது. எப்படி இந்த நிகர லாபம் சாத்தியமானது என்று பார்த்தால்... வழக்கம் போல செலவில் கை வைத்து இருக்கிறது ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி.

ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழங்கும் கமிஷன் மற்றும் கட்டணங்களை குறைத்து இருக்கிறார்கள். எந்த அளவுக்கு குறைத்து இருக்கிறார்கள் என்றால் 44 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறார்களாம். ஒரு பக்கம் இப்படி செயல்பாட்டு செலவுகளை (Operating Expenses) குறைத்துக் கொண்டிருக்கும் போதே, மறு பக்கம் செயல்பாட்டு லாப வரம்பை (Operating Profit Margin) அதிகரித்து இருக்கிறார்கள்.

ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 79% அதிகரிப்பு..!

இந்த ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் நிகர லாபம் அதிகரித்து இருந்தாலும், வருவாய் பெரிய அளவில் வளர்ச்சி காணாமல் இருப்பது கவனிக்க வேண்டி இருக்கிறது. வருவாய் குறைந்ததற்கு, சொத்துக்களை நிர்வகிப்பதற்கான கட்டணங்கள் குறைந்ததை காரணமாகச் சொல்கிறார்கள். அதோடு நிறுவனத்துக்கு புதிய முதலீட்டு வரவுகளும் கொஞ்சம் குறைந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தற்போது ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் கீழ் 1.64 லட்சம் கோடி ரூபாய்க்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார்களாம். இது கடந்த செப்டம்பர் 2018 காலாண்டை விட 11 சதவிகிதம் அதிகம் என்றாலும், வளர்ச்சி குறைவு என வருத்தப்படுகிறார்கள் ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியினர். இந்தியாவின் மொத்த மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி மட்டும் சுமார் 15 சதவிகித சந்தையைப் பிடித்து வைத்திருப்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+