இந்த பேங்க்ல வீட்டுக்கடன் வாங்கி இருக்கீங்களா? உங்களோட EMI குறைய போகுது!

இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கி தான் தங்களின் சொந்த வீடு கனவையே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பொதுத்துறை வகைகளில் தொடங்கி தனியார் துறை வங்கிகள் வரை போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு வீட்டு கடன்களை வழங்கி வருகின்றன.

வீட்டு கடனை வாங்கக்கூடிய நபர்கள் மாதம் தோறும் இஎம்ஐ தொகையாக அந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும் . இதில் வட்டியும் அசல் தொகையும் சேர்த்து கழிக்கப்படும். நாம் கடனை திரும்ப செலுத்தும் காலத்தை பொறுத்து மாதாந்திர இஎம்ஐ தொகையில் மாற்றம் இருக்கும். வங்கிகள் நமக்கு floating interest rates என்ற முறையிலும் வீட்டு கடன் வழங்குகின்றன. அப்படி floating interest rates முறையில் தனியார் வங்கிகளில் காடன் வாங்கி இருப்பவர்களுக்கு நற்செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பேங்க்ல வீட்டுக்கடன் வாங்கி இருக்கீங்களா? உங்களோட EMI குறைய போகுது!

ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு எல்லாமே ஈஎம்ஐ தொகை இந்த மாதம் முதல் குறைய போகிறது. இந்த வங்கிகள் தங்களின் அனைத்து தவணை காலங்களுக்கும் பொருந்தும் வகையில் அடிப்படை கடன் விகிதமான MCLR -இல் மாற்றத்தை அறிவித்துள்ளன. இந்த மாதம் முதலே இவை அமலுக்கு வந்துள்ளன.

முதலில் MCLR என்பது marginal cost of funds-based lending rate ஆகும். அதாவது floating interest rates முறையில் வீட்டுக் கடன்கள் , பெர்சனல் லோன்கள் மற்றும் வாகன கடன்கள் போன்றவற்றுக்கு வங்கிகளால் நிர்ணயம் செய்யப்படக்கூடிய ஒரு அளவுகோல் தான் எம்சிஎல்ஆர் என அழைக்கப்படுகிறது. இந்த எம்சிஎல்ஆர் விகிதம் குறையும்போது நம் இஎம்ஐ தொகையும் குறையும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய 6 மாத காலத்திற்கான MCLR-ஐ 8.65 சதவீதமாக குறைத்து இருக்கிறது . அதேபோல இரண்டு ஆண்டுகளுக்கான MCLR விகிதத்தையும் 8. 75% இல் இருந்து 8.70% ஆகவும் குறைத்து இருக்கிறது . இதன் மூலம் floating interest rates முறையில் ஏற்கனவே இந்த வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் இஎம்ஐ கணிசமாக குறையும்.

உதாரணமாக உங்களுடைய வீட்டுக் கடன் ஆறு மாத MCLR உடன் அல்லது இணைக்கப்பட்டு இருந்தால் உங்களின் கடன் வட்டி விகிதம் அடுத்த வட்டி சீரமைப்பு தேதியில் இந்த குறைந்த வீதத்திற்கு ஏற்ப திருத்தப்படும்.

ஹெச்டிஎஃப்சி வங்கி போலவே பேங்க் ஆப் பரோடா ஓவர்நைட் MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் என்ற அளவிலும், மூன்று மாத MCLR விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் என்ற அளவிலும் குறைத்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி , பேங்க் ஆப் இந்தியா ஆகியவையும் 5 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை தங்களுடைய MCLR விகிதங்களை குறைத்து இருக்கின்றன. 5 அடிப்படை புள்ளிகள் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட போகிறது என்ற கேள்வி எழலாம் ஆனால் நீண்ட கால அடிப்படையில் உங்களின் இஎம்ஐ தொகையில் பெரிய சேமிப்பை பெற்று தரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+