ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதங்களில் சிறு மாற்றங்களை செய்துள்ளது. இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதங்களை மாற்றாமல் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவும், மார்ஜினல் ஸ்டாண்டிங் ஃபசிலிடி (MSF) விகிதம் 6.75 சதவீதமாகவும், ஸ்டாண்டிங் டெபாசிட் ஃபசிலிடி (SDF) விகிதம் 6.25 சதவீதமாகத் தொடர உள்ளது.

இதன் மூலம் இன்று ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து இந்த எம்சிஎல்ஆர் மாற்றங்களை ஜூன் 7, 2024 முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
MCLR என்றால் என்ன?: MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) என்பது கடனுக்காக வங்கி வசூலிக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். இது ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், வங்கிகள் இந்த விகிதத்திற்கு கீழ் கடன் வழங்க முடியாது.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ஹெச்டிஎப்சி வங்கியின் 2 வருட கால வட்டி விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் மூலம் 9.35 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 9.35 சதவீதத்தில் இருந்து 9.30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் புதிய MCLR விகிதங்கள்
ஓவர்நைட் - 8.95%
1 மாதம் - 9.00%
3 மாதம் - 9.15%
6 மாதம் - 9.30%
1 ஆண்டு - 9.30%
2 ஆண்டு - 9.30% (5 basis points குறைப்பு)
3 ஆண்டு - 9.35%
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பிற கடன் வட்டி விகிதங்கள்:
அடிப்படை வட்டி விகிதம் (Base Rate): 9.45% (மார்ச் 11, 2024 முதல்)
முதன்மை கடன் வட்டி விகிதம் (Prime Lending Rate): 17.95% (மார்ச் 11, 2024 முதல்)
- சம்பளம் பெறுபவர்கள் & சுய தொழில் செய்பவர்கள்: ரெப்போ விகிதம் + 2.25% முதல் 3.15% வரை (8.75% முதல் 9.65% வரை)
நிலையான வீட்டுக் கடன் விகிதங்கள்: ரெப்போ விகிதம் + 2.90% முதல் 3.45% வரை (9.40% முதல் 9.95% வரை)


Click it and Unblock the Notifications