ஹெச்டிஎப்சி வங்கி உடன் ஹெசிடிஎப் இணைக்கப்பட்ட பின்பு, ஹெச்டிஎப்சி வங்கியின் வராக் கடன் அளவு அதிகரிக்க துவங்கியது. ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வராக் கடன் சொத்துக்கள் 1.2 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி-யிடம் இருந்து வந்த கூடுதலான பணப்புழக்கத்தின் வாயிலாக ஹெச்டிஎப்சி வங்கியின் NIM என அழைக்கப்படும் Net Interest Margins அளவு குறைய உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் NIM அளவு ஜூன் 30ல் 4.3 சதவீதமாக இருந்தது, இணைப்பிற்கு பின்பு இது 3.9 முதல் 4 சதவீதமாக குறையலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வராக் கடன் சொத்துக்கள் அதிகரிப்பு மற்றும் வட்டி வருமான மார்ஜின் அளவும் குறையும் என கூறப்பட்டு உள்ளதால் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் கடந்த 5 நாளில் 5 சதவீதத்திற்கு மேல் சரிந்து 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
ஹெச்டிஎப்சி இணைப்பிற்கு முன்பு ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வராக் கடன் சொத்துக்களின் மதிப்பு 1.2 சதவீதமாக இருந்த நிலையில் இணைப்பிற்கு பின்பு 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் டாப் 10 வங்கிகளின் நிகர வராக் கடன் சொத்துக்கள் அளவு எவ்வளவு..?
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து வங்கிகளின் மொத்த சொத்துக்களில் வராக் கடன் சொத்துக்கள் மதிப்பு மார்ச் 2023 முடிவில் 10 வருட சரிவான 3.9 சதவீதமாக சரிந்துள்ளது. மார்ச் 2018ல் மொத்த வராக் கடன் அளவு 11.5 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் 2023ல் 3.9 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் 5PAISA அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் டாப் 10 வங்கிகளின் வராக் கடன் அளவுகளை பட்டியலிட்டு உள்ளது. இந்த தரவுகளை செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிட்டு உள்ளது, இதன் படி டாப் 10 வங்கிகளின் மொத்த வராக் கடன் அளவுகளை வங்கி வாரியாக இப்போது பார்ப்போம்.
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 3 சதவீதம்
- ஹெச்டிஎப்சி வங்கி - 1.4 சதவீதம்
- ஐசிஐசிஐ வங்கி - 3 சதவீதம்
- பஞ்சாப் நேஷ்னல் வங்கி - 9 சதவீதம்
- பேங்க் ஆப் பரோடா - 3.79 சதவீதம்
- ஆக்சிஸ் வங்கி - 2 சதவீதம்
- கனரா வங்கி - 5 சதவீதம்
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 8 சதவீதம்
- பேங்க் ஆப் இந்தியா - 7 சதவீதம்
- இன்டஸ்இந்த் வங்கி - 2 சதவீதம்
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications