6 வங்கி பங்குகளை வாங்கப்போகும் HDFC குரூப்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கியின் சமீபத்திய காலாண்டு முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை மறக்க முடியாது. இதனால் கடந்த சில நாட்களாகவே ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் சரிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.

ஆனால் ஆர்பிஐ கொடுத்து வரும் ஒப்புதல்கள் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் கூடுதல் கேள்விகளை எழுப்பி வரும் காரணத்தால் தொடர்ந்து சரிவு பாதையிலேயே உள்ளது. கடந்த வாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்ஐசி நிறுவனம், ஹெச்டிஎப்சி வங்கி பங்கு இருப்பை 9.99 சதவீதம் வரையில் அதிகரிக்க ஆர்பிஐ ஒப்புதல் கொடுத்தது.

6 வங்கி பங்குகளை வாங்கப்போகும் HDFC குரூப்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது, இண்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் பந்தன் வங்கி ஆகிய 6 நிதி நிறுவனத்தில் சுமார் 9.50 சதவீத பங்குகளை ஹெச்டிஎஃப்சி வங்கி குழுமம் வாங்க அனுமதித்துள்ளது.

இந்த 6 நிதி நிறுவனங்களின் பங்குகளை ஹெச்டிஎப்சி வங்கி வாங்கப்போவது இல்லை, இதன் கிளை நிறுவனங்களான HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC), HDFC எர்கோ மற்றும் HDFC லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் முதலீடுகளுக்காக ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது என ஹெச்டிசிஎப்சி வங்கி குழுமம் பங்குச்சந்தையில் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆர்பிஐ கொடுத்துள்ள இந்த ஒப்புதல் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் மற்றும் அந்தக் காலத்திற்குள் எச்டிஎஃப்சி வங்கி குழுமம் பங்குகளை வாங்கத் தவறினால், ஒப்புதல் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 0.49 சதவீதம் சரிந்து, ஒரு பங்கு விலை 1,437.70 ரூபாயாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இப்பங்கின் விலை 15.32 சதவீதம் சரிந்துள்ளது, ஹெச்டிஎப்சி வங்கி பங்கின் 52 வார உயர்வு விலை 1,757.50 ரூபாய், 52 வார குறைவான விலை 1,380.25 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+