இந்திய வங்கித் துறையில் ஏற்கனவே பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அடுத்தகட்ட வங்கி இணைப்பு குறித்து ஆலோசனையைச் சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.
இதேவேளையில் பொதுத்துறை வங்கிகளின் ஆதிக்கத்தைத் தகர்க்கும் வகையில் தனியார் வங்கி பிரிவில் புதிதாக ஒரு வங்கி உருவாகி வருகிறது.
இந்திய வங்கி துறையில் பொதுத்துறை வங்கிகளுக்குக் கடுமையான போட்டியை அளித்து வரும் தனியார் வங்கிகள், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வாங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்குப் போட்டியாக ஹெச்டிஎப்சி உருவெடுக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி தனது வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி-ஐ இணைக்க அனைத்து தரப்பிடமும் அடுத்தடுத்து ஒப்புதலை பெற்று இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்குப் பின்பு இக்கூட்டணி சொத்து மதிப்பிலும் சரி, சந்தை மதிப்பிலும் சரி மிகப்பெரிய உயரத்தை எட்ட உள்ளது.
17.86 லட்சம் கோடி
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி இணைப்பிற்குப் பின்பு இக்கூட்டணியின் மொத்த சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உயரும். (ஹெச்டிஎப்சி வங்கி ரூ.7.76 டிரில்லியன் மற்றும் ஹெச்டிஎப்சி ரூ.4.16 டிரில்லியன்). இதேபோல் சந்தை மதிப்பை பார்க்கும் போது ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி கூட்டணியின் மதிப்பு 17.86 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 26.64 லட்சம் கோடி ரூபாய், ஹெச்டிஎப்சி கூட்டணி அடுத்தச் சில வருடத்தில் தனது வேகமாகத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் முறை மூலம் கட்டாயம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ - ஹெச்டிஎப்சி
இந்திய கடன் சந்தையில் பெரிய தொகையில் கடன் கொடுப்பதில் முன்னோடியாக இருக்கும் எஸ்பிஐ வங்கி-க்குப் போட்டியாக ஒரு தனியார் வங்கி வருவது என்பது இந்திய வரலாற்றில் நடக்காத ஓன்று. பொதுத்துறை வங்கிகளும் சரி, நிறுவனங்களும் சரி அதன் மீதான நம்பிக்கை வர்த்தக ஆதிக்கம், அதிகப்படியான வாடிக்கையாளர் வாயிலாகத் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஆதிக்கம்
தற்போது இந்த ஆதிக்கத்திற்கும் தனியார் துறையால் பாதிப்பு என்றால் கட்டாயம் இது சீரியஸ் ஆன பிரச்சனையாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது. ஹெச்டிஎப்சி கூட்டணியின் வெற்றி பொதுத்துறை வங்கிகளின் சரிவு பாதையாக மாறலாம், ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை என்பது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Imperial Bank of India வரலாறு
இன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, முன்பு Imperial Bank of India. இந்த வங்கி 1955 ஆம் ஆண்டில் இருந்து இந்திய கடன் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தப் போட்டியை எப்படி எஸ்பிஐ வங்கி நிர்வாகமும், மத்திய நிதியமைச்சகமும் கையாளப்போகிறது என்பது தான் தற்போது டிரில்லியன் டாலர் கேள்வி.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications