இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி , சில முக்கியக் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் வரையிலான MCLR விகிதங்களை அதிகரித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இப்புதிய வட்டி விகதம் நவம்பர் 7 தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
இப்புதிய உயர்வின் மூலம் HDFC வங்கியின் MCLR விகிதம் தற்போது 8.65 சதவீதம் முதல் 9.30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 5 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.05 சதவீதம் உயர்வின் மூலம் ஹெச்டிஎப்சி வங்கியின் ஓவர்நைட் எம்சிஎல்ஆர் 8.60 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓவர்நைட் எம்சிஎல்ஆர் விகிதம் தான் ஒரு வங்கியின் குறைந்தபட்ச கடனுக்கான வட்டி விகிதமாகும்.

இதேபோல் எச்டிஎப்சி வங்கியின் ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. மூன்று மாத எம்சிஎல்ஆர் முந்தைய 8.85 சதவீதத்தில் இருந்து 8.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் 9.20 சதவீதமாகவே உள்ளது. இந்தப் பிரிவில் தான் பெரும்பாலான கன்ஸ்யூமர் பொருட்களுக்கான கடன்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் 2 மற்றும் 3 வருட கடனுக்கான MCLR விகிதம் 9.25% மற்றும் 9.30% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
கடந்த வருடம் ஹெச்டிஎப்சி வங்கியின் ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதம் 8.20 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 9.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் ஆர்பிஐ அறிவித்த ரெப்போ விகித உயர்வு தான்.
இதன் மூலம் HDFC வங்கியில் கடன் வாங்கிய அனைவரும் தங்களுடைய கடனுக்கான வட்டி விகிதத்தை முதலில் செக் பண்ணுங்க. உங்க ஈஎம்ஐ தொகை உயர்ந்தால் எம்சிஎல்ஆர் விகிதம் உயர்த்தியது தான் முக்கியக் காரணமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications