இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் கடந்த ஒரு வாரமாக வேகமாக சரிந்து வருவது பங்குசந்தை முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் ஹெச்டிஎப்சி வங்கியில் பணத்தை டெப்பாசிட் செய்துள்ளவர்களுக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி குறித்து அனைத்து தரப்பினரும் அச்சப்பட என்ன காரணம்..? வாங்க மூழுசா தெரிஞ்சிப்போம்.
ஹெச்டிஎப்சி வங்கி சமீபத்தில் அதன் தாய் நிறுவனமும், நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி கடன் சேவை பிரிவான ஹெச்டிஎப்சி உடன் ரிவர்ஸ் மெர்ஜிங் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். ஜூலை 1 ஆம் தேதி செய்யப்பட்ட இணைப்பின் மூலம் இந்த கூட்டணி நிறுவனம் 41 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்து, உலகின் டாப் 10 வங்கிகள் பட்டியிலுக்குள் நுழைந்தது.

ஆனால் மொத்த பிரச்சனையும் இங்கு தான் துவங்கியது, ஹெச்டிஎப்சி வங்கி உடன் ஹெசிடிஎப் இணைக்கப்பட்ட பின்பு இக்கூட்டணியில் வாரக் கடன் அதாவது BAD LOANS அளவு அதிகரிக்க துவங்கியது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை கொடுத்து மட்டும் அல்லாமல் இவ்வங்கியில் டெபாசிட், வைப்பு நிதி வைத்துள்ளவர்களையும் கலங்க வைத்துள்ளது.
ஹெச்சிடிஎப்சி வங்கியின் தலைமை நிதியியல் தலைவரான சீனிவாசன் வைத்தியநாதன் ஆய்வாளர்கள் உடன் பேசுகையில் ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கியின் கிராஸ் வாராக் கடன் சொத்துக்கள் 1.2 சதவீதமாத இருந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி 1.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் NPA விகிதம் முதல் காலாண்டு முடிவில் 0.3 சதவீதமாக இருந்த நிலையில் 0.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என கூறினார்.
தற்போது அதிகரித்துள்ள வராக் கடன் பெருமளவு ஹெச்டிஎப்சி-யின் ரீடைல் அல்லாத ஹவுசிங் லோன் போர்ட்போலியோவில் இருந்கு வந்துள்ளது. இதன் மொத்த வாராக் கடன் அளவு மட்டும் 6.7 சதவீதம், இது ஜூலை 1 ஆம் தேதி நிலவரம். சில தனிநபர் அல்லாத கணக்குகள் வங்கியின் ரிஸ்க் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்புடையதாக இல்லை என சீனிவாசன் வைத்தியநாதன் தெரிவித்தார்.
மார்ச் 31 படி ஹெச்டிஎப்சி-யின் மொத்த கடன் புத்தகத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய், இதில் 4.99 லட்சம் கோடி ரீடைல் கடன்கள், 1.15 லட்சம் கோடி ரூபாய் கடன் கார்பரேட் அமைப்புகளுக்கான கடன். ஹெச்டிஎப்சி வங்கியிடம் இத்தகைய கடனுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க ஆதாரம் உள்ளது எனவும் தெரிவித்தார். ஜூலை 1 ஆம் தேதி இணைப்புக்கு பின்பு மொத்த கடன் புத்தகத்தின் மதிப்பு 22 லட்சம் கோடி ரூபாயாகும்.
இந்த நிலையில் ஹெச்டிஎப்சி-யிடம் இருந்து வந்த கூடுதலான பணப்புழக்கத்தின் வாயிலாக NIM என அழைக்கப்படும் Net Interest Margins அளவு குறைய உள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் NIM அளவு ஜூன் 30ல் 4.3 சதவீதமாக இருந்தது, இணைப்பிற்கு பின்பு இது 3.9 முதல் 4 சதவீதமாக குறையலாம்.
கூடுதலான பணப்புழக்கத்தோடு, ICRR அளவின் பாதிப்பும் இருக்கும் காலத்தில் குறுகிய காலக்கட்டத்திற்து NIM அளவுகள் பாதிக்கப்படும், இந்த பாதிப்பு 2025 ஆம் நிதியாண்டில் சரியாகும் என செவ்வாய்க்கிழமை ஜெப்ரீஸ் தெரிவித்துள்ளது. இதேபோல் ஜெப்ரீஸ் ஹெச்சிஎப்சி வங்கியின் டார்கெட் விலையை 2100 ரூபாயில் இருந்து 2030 ரூபாய் வரையில் குறைத்துள்ளது.
இதன் எதிரொலியாக கடந்த 5 நாள் வர்த்தகத்தில் மட்டும் HDFC Bank பங்குகள் சுமார் 5.47 சதவீதம் சரிந்து இவ்வங்கியின் சந்தை மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளது. மேலும் இன்று 2.40 மணியளவில் HDFC Bank பங்குகள் 0.49 சதவீதம் சரிந்து 1,556.10 ரூபாய் விலையில் வர்த்தகமாக 11.79 லட்சம் ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை பெற்றுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications