வருகின்ற 2027-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் HDFC வாடிக்கையாளர்கள் ரூ.500 அல்லது அதற்கு குறைவான யுபிஐ பரிவர்த்தனை செய்யும் போது SMS அலர்ட் அனுப்பப்படாது என்று வங்கியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற குறைவான பரிவர்த்தனைக்கும் ஈ-மெயில் மூலமாக மெசேஜ் தொடர்ந்து அனுப்பப்படும்.
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய HDFC அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள ஈ-மெயில் முகவரியை அப்டேட் செய்து கொள்ளும்படி HDFC பேங்க் கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு வேளை நீங்கள் பழைய ஈ-மெயில் முகவரியை பயன்படுத்தி வந்தால் பிரச்சனை இல்லை. புதிதாக மெயில் முகவரியை மாற்றி இருந்தால் கட்டாயம் வங்கியைத் தொடர்பு கொண்டு அதனை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.

கட்டணம் உண்டா?: ஈமெயில் மூலமாக நீங்கள் செய்யும் பரிவர்த்தனைக்கு மெசேஜ் அனுப்பப்படும். இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இது முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளது. 2027-ஆம் ஆண்டி ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அனைத்து யூபிஐ பரிவர்த்தனைக்கும் ஈ-மெயில் அலர்ட் அனுப்பப்படும். ஆனால் ரூ.500-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு SMS அலர்ட் வராது. இது அனைத்து யுபிஐ பரிவர்த்தனைக்கும் பொருந்தும்.
HDFC பேங்க் ஆப் மூலம் யூபிஐ வழியாக பணம் அனுப்புவது எப்படி?: முதலில் HDFC பேங்க்-கின் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழையுங்கள். உள் நுழைந்த உடன் "Send Money" என்ற ஆப்ஷன் இருக்கும்.
அதற்கு கீழ் "Payee Name, Account/Mobile no or UPI ID" என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதில் பணம் அனுப்புவதற்கான மொபைல் நம்பர், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் அல்லது ஒன் டைம் ட்ரான்ஸ்ஃபர் ஆகியவற்றில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பணம் அனுப்பலாம் அல்லது HDFC பேங்க்-இன் ஆப்-பில் உள்நுழையாமலேயே ஹோம் பேஜில் தெரியும் "Send Money" அல்லது "Scan & Pay" என்ற ஆப்ஷனை பயன்படுத்தியும் உடனடியாக பணம் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு யூபிஐ மூலம் எவ்வளவு பணம் அனுப்ப முடியும்?: ஒரு வங்கி கணக்கில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அதிகபட்சமாக 10 பரிவர்த்தனை வரை செய்ய அனுமதி உண்டு. ஆனால் அதிகபட்ச தொகை ரூ.1 லட்சத்தை தாண்டக்கூடாது. 10 பரிவர்த்தனை என்பது தனி நபர்களுக்கு பணம் அனுப்ப மட்டுமே பொருந்தும். பில் பேமென்ட் போன்றவற்றுக்கு இந்த வரம்பு பொருந்தாது.


Click it and Unblock the Notifications
