அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் பிரபல பொருளாதார நிபுணர் மற்றும் நிதி ஆய்வாளரான அலஸ்டேர் மேக்லியோட் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 8000 டாலரை எட்டும் என்று கணித்துள்ளார். அதாவது இந்திய மதிப்புக்கு தோராயமாக 2,39,124 ரூபாய்.
டாப் அப் மைன் எனும் பாட்காஸ்டில் தேவன் முருகன் என்பவரிடம் பேசிய அலஸ்டேர் மேக்லியோட், தங்கம் 8000 டாலரை தொடும். அதற்காக தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும் என்று நினைக்க கூடாது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது என்பதே இதன் அர்த்தம்.

தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற சூழலில் தங்கத்தை வைத்திருப்பது தான் உண்மையான மதிப்பு என்று முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கத்தை விற்க வேண்டும் என்ற தவறான எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் வந்து விடுகிறது. வட்டி விகித ஏற்ற இறக்கங்களை மட்டுமே வைத்து தங்கத்தின் மதிப்பை ஒருபோதும் எடை போடக்கூடாது.
அமெரிக்க மக்கள் இந்தியர்களைப் போல தங்கத்தில் தங்களுடைய முதலீட்டை வைத்திருக்க மாட்டார்கள். பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் தான் அதிக முதலீடு செய்வார்கள். இதனால் அவர்களிடம் சேமிப்பாக இருக்கும் தங்கத்தின் அளவு குறைவாகவே இருக்கும். பங்கு சந்தையில் சரிவு ஏற்படும் நேரத்தில் பணப்புழக்கம் குறைய தொடங்கும். அப்போது அவர்களிடம் உள்ள பங்குகள் மற்றும் வீடு அல்லது பிற சொத்துக்களை குறைந்த விலையாக இருந்தாலும் அவசர அவசரமாக விற்கத் தொடங்குவார்கள்.
எனவே வங்கியில் பணத்தை வைத்திருக்கும் போது ஏதேனும் இக்கட்டான பொருளாதார பிரச்சினை ஏற்படும் பொது பணம் கிடைக்காமல் போகவும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் பங்குச் சந்தையில் பணத்தை போடுவதற்கு பதிலாக தங்கத்தில் பணத்தை போடுவது பாதுகாப்பாக இருக்கும் என்று அலஸ்டேர் மேக்லியோட் கூறியுள்ளார்.
ஒரு டாலரின் மதிப்பு தற்போது 92.97-ஆக இருக்கிறது அதன் அடிப்படையில் பார்த்தால் 8000 டாலருக்கு தங்கம் விலை உயர்ந்தால் அதற்கு இந்திய மதிப்பில் 7,43,760 ரூபாய் தேவைப்படும். அப்படியானால் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.23,912.42-ஆக இருக்கும். அப்போது 10 கிராம் தங்கம் வாங்க 2,39,124 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி வரலாம்.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்கு வருகின்ற டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 4.25 சதவீதமாக ஆக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி வெளியான தகவல்களின் அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் செலவின பணவீக்கம் 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கு பிறகு பதிவான அதிகபட்ச பணவீக்க விகிதமாகும்.


Click it and Unblock the Notifications
